PT 8.3.5

என் வரிவளைகளை இழந்துவிட்டேன்

1672 வாயெடுத்தமந்திரத்தால் அந்தணர்தம்செய்தொழில்கள் *
தீயெடுத்துமறைவளர்க்கும் திருக்கண்ணபுரத்துறையும் *
தாயெடுத்தசிறுகோலுக்கு உளைந்தோடி * தயிருண்ட
வாய்துடைத்தமைந்தனுக்கு இழந்தேன்என்வரிவளையே.
1672 vāy ĕṭutta mantirattāl * antaṇar tam cĕy tŏzhilkal̤ *
tī ĕṭuttu maṟai val̤arkkum * tirukkaṇṇapurattu uṟaiyum **
tāy ĕṭutta ciṟu kolukku * ul̤aintu oṭi tayir uṇṭa *
vāy tuṭaitta maintaṉukku * izhanteṉ-ĕṉ vari val̤aiye-5

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1672. She says, “ My curved bangles grow loose and fall from my arms, for the lord who, as a little boy Kannan, ran around wiping his mouth when his mother Yashodā chased him with a small stick because he has stolen yogurt and eaten it. He stays in Thirukkannapuram where Vediyars make fires, perform sacrifices and recite the mantras of the Vedās. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அந்தணர் வேதவித்பன்னர்கள்; வாய் எடுத்த பாராயணம் பண்ணும்; மந்திரத்தால் மந்திரங்களோடு; தம் செய் தாங்கள் செய்யும்; தொழில்கள் அநுஷ்டானங்களையும்; தீ அக்நி காரியங்களையும்; எடுத்து குறையறச் செய்து; மறை வளர்க்கும் வேதங்களை வளர்க்கும்; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; தாய் எடுத்த தாய் யசோதை கையிலெடுத்த; சிறு கோலுக்கு சிறு கோலுக்கு; உளைந்து ஓடித் அஞ்சி ஓடி; தயிர் உண்ட தயிர் உண்ட; வாய் துடைத்த வாயைத் துடைத்துக்கொள்ளும்; மைந்தனுக்கு பெருமானுக்கு; என் பொன் எனது அழகிய பொன்; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்