PT 8.3.10

இவற்றைப் பாடினால் வினைகள் சேரா

1677 தேமருவுபொழில்புடைசூழ் திருக்கண்ணபுரத்துறையும்
வாமனனை * மறிகடல்சூழ் வயலாலிவளநாடன் *
காமருசீர்க்கலிகன்றி கண்டுரைத்ததமிழ்மாலை *
நாமருவிஇவைபாட வினையாயநண்ணாவே. (2)
1677 ## te maruvu pŏzhil puṭai cūzh * tirukkaṇṇapurattu uṟaiyum
vāmaṉaṉai * maṟi kaṭal cūzh * vayal āli val̤a nāṭaṉ **
kāmaru cīrk kalikaṉṟi * kaṇṭu uraitta tamizh-mālai *
nā maruvi ivai pāṭa * viṉai āya naṇṇāve-10

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1677. Thirumangai, the famous king of Thiruvāli with its flourishing fields composed ten beautiful Tamil pāsurams on Vāmanān the god of Thirukannapuram surrounded by the ocean with rolling waves and groves where honey drips from flowers. If devotees learn and recite these pāsurams their bad karmā will have no results.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தே மருவு தேன் நிறைந்த; பொழில் புடை சூழ் சோலைகளால் சூழ்ந்த; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; வாமனனை வாமநப் பெருமானைக் குறித்து; மறி கடல் சூழ் அலைகளால் சூழ்ந்த கடலால்; வயல் வயல் வளங்களையுடைய; ஆலி வள நாடன் ஆலி நாடன் என்னும்; காமரு விரும்பத்தக்க; சீர் குணங்களையுடையவருமான; கலிகன்றி திருமங்கையாழ்வார்; கண்டு உரைத்த ஆராய்ந்து அருளிச்செய்த; தமிழ் மாலை இவை இத்தமிழ்ப் பாசுரங்களை; நா மருவி பாட நாவினால் மனமுருகி பாட; வினையாய நண்ணாவே பாபங்கள் அணுகாதே