PT 8.2.6

என் மகள் மிகவும் இளமை உடையவள்

1663 வடவரைநின்றும்வந்து இன்றுகணபுரம் *
இடவகைகொள்வது யாமென்று பேசினாள் *
மடவரல்மாதர்என்பேதை இவர்க்குஇவள்
கடவதென்? * கண்துயில் இன்றுஇவர்கொள்ளவே.
1663 vaṭa varai niṉṟum vantu * iṉṟu kaṇapuram
iṭavakai kŏl̤vatu * yām ĕṉṟu peciṉāl̤ **
maṭavaral mātar ĕṉ petai * ivarkku ival̤
kaṭavatu ĕṉ- * kaṇ tuyil iṉṟu ivar kŏl̤l̤ave?-6

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1663. “My daughter says, ‘I came to Thirukannapuram from Thirumālai in the north to be with the lord. ’ My beautiful daughter is innocent. Does she owe him anything? She cannot sleep at all. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வட வரை வடக்குத் திருமலையிலிருந்து; நின்றும் வந்து வந்து; இன்று கணபுரம் இன்று திருக்கண்ணபுரத்தை; இடவகை இருப்பிடமாக; கொள்வது யாம் கொண்டிருப்பது நானே; என்று பேசினாள் என்று பேசினாள்; மடவரல் அழகாலும்; மாதர் இவள் மரியாதையுடனும் இருக்கும்; என் பேதை என் பேதைப் பெண்ணுக்கும்; இவர்க்கு இப்பெருமானுக்கும் என்னப் ப்ராப்தி?; இன்று இவர் இன்று இவர்; கண் துயில் இவளுடைய உறக்கத்தை; கொள்ளவே கொள்ளை கொள்ள; கடவது என்? செய்யக் கூடியது தான் என்ன?