PT 8.2.5

இவள் உடம்பில் பசலை (தேமல்) பரவிவிட்டதே

1662 கண்ணனூர்கண்ணபுரம் தொழும்காரிகை *
பெண்மையும்தன்னுடை உண்மையுரைக்கின்றாள் *
வெண்ணெயுண்டுஆப்புண்ட வண்ணம்விளம்பினாள் *
வண்ணமும் பொன்னிறமாவதுஒழியுமே.
1662 kaṇṇaṉ ūr * kaṇṇapuram tŏzhum kārikai *
pĕṇmai ĕṉ? taṉṉuṭai * uṇmai uraikkiṉṟāl̤ **
vĕṇṇĕy uṇṭu āppuṇṭa * vaṇṇam vil̤ampiṉāl *
vaṇṇamum * pŏṉ niṟam āvatu ŏzhiyume-5

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1662. “My lovely daughter worships Kannapuram where Kannan stays. When she says, ‘I am a girl and I love the god, ’ she is telling the truth. Perhaps if she hears someone tell her how he stole and ate butter and how Yashodā tied him to a mortar, the pallid color of her body will change back to normal. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணன் ஊர் கண்ணனுடைய ஊரான; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; தொழும் காரிகை தொழும் இவள் அழகானவள்; பெண்மையும் பெண்மையும் நிறைந்திலள்; தன்னுடை தன் மனதில்; உண்மை தோன்றும் உண்மையை; உரைக்கின்றாள் கூறுகிறாள்; வெண்ணெய் வெண்ணெய்; உண்டு ஆப்புண்ட உண்டு கட்டுப்பட்ட; வண்ணம் விஷயத்தை; விளம்பினால் யாராவது கூறினால்; வண்ணமும் இவளுடைய மேனி நிறமும்; பொன் நிறம் பொன் நிறம்; ஆவது ஆகிறது; ஒழியுமே அவளு டைய அழகும் போய்விடுகிறது