கை வளை கொள்ளுவது தக்கதே என்ன -என்றாள் நமக்குக் கை வளை கொள்ளத் தகாமை என் -என்று சௌரிப் பெருமாள் கேட்க – தகாது என்னும் இடத்தை உபபாதிக்கிறாள் கீழ் –
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர் வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ துள்ளு நீர் கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-
1-தெள்ளியீர் -ஸர்வஞ்ஞத்வம் -இவள் கை வளை கொள்வது தக்கதே- 2-தேவர்க்கும்