PT 8.10.9

என் நெஞ்சில் நீ இருப்பதை வெளிப்படுத்தினாய்

1746 நாட்டினாய்என்னை உனக்குமுன்தொண்டாக *
மாட்டினேன்அத்தனையே கொண்டுஎன்வல்வினையை *
பாட்டினால்உன்னை என்நெஞ்சத்திருந்தமை
காட்டினாய் * கண்ணபுரத்துறையம்மானே!
1746 nāṭṭiṉāy ĕṉṉai * uṉakku muṉ tŏṇṭu āka *
māṭṭiṉeṉ attaṉaiye kŏṇṭu * ĕṉ valviṉaiyai **
pāṭṭiṉāl uṉṉai * ĕṉ nĕñcattu iruntamai
kāṭṭiṉāy- * kaṇṇapurattu uṟai ammāṉe-9

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1746. You have made me your devotee and all my bad karmā has left me. You showed me how I can praise you with songs and keep you in my heart, O dear god of Kannapuram.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறை அம்மானே! இருக்கும் பெருமானே!; முன் என்னை முதலில் என்னை; உனக்கு உனக்கு; தொண்டு ஆக தொண்டு செய்பவனாக ஆக்கி; நாட்டினாய் நிலைப்படுத்தினாய்; அத்தனையே கொண்டு அதனால்; என் வல்வினையை என் கொடிய பாவங்களை; மாட்டினேன் மாளச்செய்தேன்; உன்னை உன்னை நான்; பாட்டினால் பாடிய பாசுரங்களினால்; என் நெஞ்சத்து நீ எனது நெஞ்சினுள்; இருந்தமை இருந்த இருப்பை; காட்டினாய் காட்டி அருளினாய்