PT 8.10.5

யாரையும் விரும்பாமல் உன்னையே அடைந்தேன்

1742 பெற்றாரும்சுற்றமும்என்று இவைபேணேன்நான் *
மற்றாரும்பற்றிலேன் ஆதலால்நின்னடைந்தேன் *
உற்றானென்றுஉள்ளத்துவைத்து அருள்செய்கண்டாய் *
கற்றார்சேர் கண்ணபுரத்துறையம்மானே!
1742 pĕṟṟārum cuṟṟamum * ĕṉṟu ivai peṇeṉ nāṉ *
maṟṟu ārum paṟṟu ileṉ * ātalāl niṉ aṭainteṉ **
uṟṟāṉ ĕṉṟu ul̤l̤attu vaittu * arul̤cĕy kaṇṭāy- *
kaṟṟār cer * kaṇṇapurattu uṟai ammāṉe-5

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1742. I do not want any connection with parents and relatives. I have no affection for any other but have come to you. You should think of me as your friend in your heart and give me your grace, O lord, dear lord of Kannapuram where learned people live.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கற்றார் கற்றவர்கள்; சேர் சேர்ந்து வாழுமிடமான; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறை அம்மானே! இருக்கும் பெருமானே!; பெற்றாரும் தாய் தந்தையரும்; சுற்றமும் என்று உறவினருமான; இவை இவர்களை நான்; பேணேன் விரும்பவில்லை; மற்று ஆரும் மற்றவர்களிடமும்; பற்று இலேன் பற்று உடையவன் இல்லை; ஆதலால் நின் ஆதலால் உன்னை வந்து; அடைந்தேன் அடைந்தேன்; உள்ளத்து உம்முடைய உள்ளத்தில்; உற்றான் என்று இவன் நம்முடையவன் என்று; வைத்து அபிமானித்து எனக்கு; அருள் செய் கண்டாய் அருள் செய்ய வேண்டும்