PT 8.10.3

அஷ்டாக்ஷரத்தையே நான் கற்றேன்

1740 மற்றும்ஓர்தெய்வம்உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் * உற்றதும் உன்னடியார்க்கடிமை *
மற்றெல்லாம்பேசிலும் நின்திருவெட்டெழுத்தும்
கற்றுநான் * கண்ணபுரத்துறையம்மானே! (2)
1740 ## மற்றும் ஓர் தெய்வம் உளது என்று * இருப்பாரோடு
உற்றிலேன் * உற்றதும் * உன் அடியார்க்கு அடிமை **
மற்று எல்லாம் பேசிலும் * நின் திரு எட்டு எழுத்தும்
கற்று * நான் கண்ணபுரத்து உறை அம்மானே 3
1740 ## maṟṟum or tĕyvam ul̤atu ĕṉṟu * iruppāroṭu
uṟṟileṉ * uṟṟatum * uṉ aṭiyārkku aṭimai **
maṟṟu ĕllām pecilum * niṉ tiru ĕṭṭu ĕzhuttum
kaṟṟu * nāṉ-kaṇṇapurattu uṟai ammāṉe-3

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1740. I will not make friends with those who think there are other gods. I am a slave only of your devotees. Whatever I say, it is only the eight sounds of your divine name that I have learned, O lord, dear god of Thirukkannapuram.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறை அம்மானே! இருக்கும் பெருமானே!; மற்றும் ஓர் உன்னைக்காட்டிலும் வேறொரு; தெய்வம் உளது என்று தெய்வம் இருப்பார் என்று; இருப்பாரோடு சொல்பவர்களோடு; உற்றிலேன் அடியேன் சேரமாட்டேன்; நின் உன்னுடைய; திருஎட்டு எழுத்தும் அஷ்டாக்ஷரம்; கற்று நான் உற்றதும் நான் கற்று அறிந்தது; மற்று எல்லாம் அறியவேண்டிய எல்லா; பேசிலும் பொருள்களையும் சொன்னாலும்; உன் அடியார்க்கு உன் அடியார்க்கு; அடிமை அடிமை செய்வதையே தொண்டாக நினைப்பேன்

Āchārya Vyākyānam

(திருக் கல்யாண திருக்கோலம் -தானம் வாங்கும் ஹஸ்தம் நீல மேகப்பெருமாள் மூலவர் -ஆஹ்லாத கரம் புண்டரீக விசாலாட்க்ஷம் சரத் சந்த்ர நிவாசனம் நீலாத்ரி த்ருஷ்டாந்தம் நீலமேகம் அஹம் பஜே சவுரி பெருமாள் உத்சவர் உத்பலாதவக விமானம் -ஆழ்வார் திருக்கண்கள் கொண்டே சேவிக்க முடியும் பலம் -மாம்சம் உத்பல -வைராக்யம் -சரீரத்தில் ஆசை விட்டவர்களுக்கே மோக்ஷம் கொடுப்பதற்காகவே -முமுஷுக்களுக்கே -இங்கு

+ Read more