PT 8.10.2

கண்ணபுரத்தானே! நீயே என் தெய்வம்

1739 பெருநீரும்விண்ணும் மலையும்உலகேழும் *
ஒருதாராநின்னுளொடுக்கிய நின்னையல்லால் *
வருதேவர்மற்றுளரென்று என்மனத்திறையும்
கருதேன்நான் * கண்ணபுரத்துறையம்மானே!
1739 pĕru nīrum viṇṇum * malaiyum ulaku ezhum *
ŏru tārā niṉṉul̤ ŏṭukkiya * niṉṉai allāl **
varu tevar maṟṟu ul̤ar ĕṉṟu * ĕṉ maṉattu iṟaiyum
karuteṉ nāṉ- * kaṇṇapurattu uṟai ammāṉe-2

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1739. You contain within yourself the wide oceans, the sky, the mountains and all the seven worlds. I will not even think there are other gods except you to keep in my heart, O lord, god of Thirukkannapuram.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறை அம்மானே! இருக்கும் பெருமானே!; பெரு நீரும் கடலையும்; விண்ணும் ஆகாயத்தையும்; மலையும் மலைகளையும்; உலகு ஏழும் ஏழுலகங்களையும்; ஒரு தாரா ஒருமாலையாக; நின்னுள் உன்னுள்ளே; ஒடுக்கிய அடங்கச் செய்து கொண்ட; நின்னை அல்லால் உன்னைத்தவிர; வரு தேவர் மற்று வேறு தேவதைகள்; உளர் என்று இருப்பார்கள் என்று; நான் என் மனத்து நான் என் மனதினால்; இறையும் சிறிதும்; கருதேன் நினைத்தறியேன்