PT 7.8.6

வாமனாவதாரம் எடுத்தவன் இவனே

1623 வானவர்தம்துயர்தீரவந்துதோன்றி
மாணுருவாய்மூவடிமாவலியைவேண்டி *
தானமரஏழுலகும்அளந்த வென்றித்
தனிமுதல்சக்கரப்படைஎன்தலைவன்காண்மின் *
தேனமரும்பொழில்தழுவும்எழில்கொள்வீதிச்
செழுமாடமாளிகைகள்கூடந்தோறும் *
ஆனதொல்சீர்மறையாளர்பயிலும்செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1623 vāṉavar-tam tuyar tīra vantu toṉṟi *
māṇ uru āy mūvaṭi māvaliyai veṇṭi *
tāṉ amara ezh ulakum al̤anta vĕṉṟit *
taṉi mutal cakkarap paṭai ĕṉ talaivaṉ kāṇmiṉ- **
teṉ amarum pŏzhil tazhuvum ĕzhil kŏl̤ vītic *
cĕzhu māṭa māl̤ikaikal̤ kūṭamtoṟum *
āṉa tŏl cīr maṟaiyāl̤ar payilum cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-6

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1623. When the gods were afflicted by Māhabali, Thirumāl, my chief with an unmatched discus, went as a dwarf to Mahābali and asked for three feet of land, and when he received the boon, he measured the world and the sky with his two feet. He stays happily in prosperous, beautiful Thiruvazhundur surrounded with groves dripping with honey and filled with precious palaces where famous Vediyars, praised from the ancient times, recite the Vedās.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேன் அமரும் தேன் நிறைந்த; பொழில் தழுவும் சோலைகளால் சூழ்ந்த; எழில் கொள் வீதி அழகிய வீதிகளும்; செழு மா செழித்த மாட; மாளிகைகள் மாளிகைகளும்; கூடம் தோறும் மற்றுமுள்ள இடங்களிலும்; ஆன தொல் சீர் ஆத்மகுணம் நிறைந்த பழைய; மறையாளர் புகழுடைய வைதிகர்கள் வாழும்; பயிலும் சிறப்புடைய; செல்வத்து செல்வம் நிறைந்த; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; வானவர் தம் வானவர்களின்; துயர் தீர துயர் தீர; மாண் உருவாய் வாமநனாய்; வந்து தோன்றி வந்து தோன்றி; மா வலியை மஹாபலியினிடத்தில்; மூவடி மூன்றடி நிலத்தை; வேண்டி வேண்டிப்பெற்று; ஏழ் உலகும் ஏழ் உலகும்; தான்அமர தன் திருவடிக் கீழ்அடங்கும்படி; அளந்த வென்றி அளந்து வெற்றி பெற்று; தனி முதல் ஒப்பற்ற திருவிக்கிரமனாக வளர்ந்ததால்; சக்கரப்படை சக்கராயுதத்தை கையிலுடையவனை; என் தலைவன் எம் தலைவனை; காண்மின் கண்டு களியுங்கள்