PT 7.5.6

என் உள்ளம் புகுந்தவர் நின்ற ஊர் இது

1593 ஏடிலங்குதாமரைபோல் செவ்வாய்முறுவல்செய்தருளி *
மாடுவந்துஎன்மனம்புகுந்துநின்றார் நின்றஊர்போலும் *
நீடுமாடத்தனிச்சூலம்போழக் கொண்டல்துளிதூவ *
ஆடலரவத்தார்ப்புஓவா அணியார்வீதிஅழுந்தூரே.
1593 eṭu ilaṅku tāmaraipol * cĕvvāy muṟuval cĕytarul̤i *
māṭu vantu ĕṉ maṉam pukuntu * niṉṟār niṉṟa ūrpolum- **
nīṭu māṭat taṉic cūlam * pozhak kŏṇṭal tul̤i tūva *
āṭal aravattu ārppu ovā * aṇi ār vīti azhuntūre-6

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1593. Smiling with his beautiful blooming lotus mouth he came near me, gave his grace and entered my heart. He stays in Thiruvazhundur filled with beautiful streets where the sulam decorations on the tops of palaces touch the rain-giving clouds and the sound of celebration on the streets never ceases.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீடு மாட உயர்ந்த மாடங்களிலுள்ள; தனிச் சூலம் ஒப்பற்ற சிகரமானது; போழக் கொண்டல் மேகத்தைக் கீண்டு பிளக்க மேகம்; துளிதூவ மழை பொழிய; ஆடல் அரவத்து ஆடும் பெண்களின் ஆரவாரத்தால்; ஆர்ப்பு உண்டான பேரொலி; ஓவா இடைவிடாமல் இருக்கும் ஊர்; அணியார் வீதி அணியார் வீதி; அழுந்தூரே திருவழுந்தூர்; ஏடு இலங்கு இதழ்களினால் நிறைந்த; தாமரைபோல் தாமரைப் பூ போல்; செவ்வாய் முறுவல் சிவந்த புன்முறுவல்; செய்தருளி செய்துகொண்டு; மாடு வந்து என் அருகில் வந்து; என் மனம் என் மனம்; புகுந்து நின்றார் புகுந்து நின்றார்; நின்ற அப்படி நின்ற; ஊர் போலும் ஊர் திருவழுந்தூர்