PT 7.4.8

சாரநாதனின் அடியார்க்கடியார்க்குத் துன்பமே இல்லை

1585 உண்ணாதுவெங்கூற்றம்
ஓவாதுபாவங்கள்சேரா * மேலை
விண்ணோரும்மண்ணோரும்வந்திறைஞ்சும்
மென்தளிர்போலடியினானை *
பண்ணாரவண்டியம்பும்
பைம்பொழில்சூழ்தண்சேறையம்மான்தன்னை *
கண்ணாரக் கண்டுருகிக்
கையாரத்தொழுவாரைக் கருதுங்காலே.
1585 uṇṇātu vĕm kūṟṟam * ovāta
pāvaṅkal̤ cerā * melai
viṇṇorum maṇṇorum vantu iṟaiñcum *
mĕṉ tal̤irpol aṭiyiṉāṉai **
paṇ āra vaṇṭu iyampum * paim pŏzhil cūzh
taṇ ceṟai ammāṉ-taṉṉai *
kaṇ ārak kaṇṭu urukik * kai ārat
tŏzhuvāraik karutuṅkāle-8

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1585. The gods in the sky and the people of the earth come and praise him whose feet are soft as tender shoots. He stays in Thiruthancherai surrounded by flourishing groves where bees swarm and sing. If devotees see him with their eyes, melting in their hearts and worshiping him folding their hands, cruel Yama will not hurt them and the results of bad karmā will not come to them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மேலை விண்ணோரும் தேவர்களும்; மண்ணோரும் உலகத்தவர்களும்; வந்து இறைஞ்சும் வந்து வணங்கும்படியான; மென் தளிர் போல் மென்மையான தளிர் போன்ற; அடியினானை திருவடிகளை யுடையவனும்; பண் ஆர ரீங்கரிக்கும்; வண்டு இயம்பும் வண்டுகள் நிறைந்த; பைம் பொழில் சூழ் சோலைகளால் சூழந்த; தண் சேறை குளிர்ந்த திருச்சேறை; அம்மான் தன்னை பெருமானை; கண் ஆரக் கண்டு கண் ஆரக் கண்டு; உருகி கை ஆர மனம் உருகி கையார; தொழுவாரை தொழும் பக்தர்களை; கருதுங்காலே சிந்தைசெய்த மாத்திரத்தில்; வெம் கூற்றம் கொடிய யமதூதன்; உண்ணாது நெருங்க மாட்டான்; ஓவாத இடைவிடாமல் பாதிக்கும்; பாவங்கள் சேரா பாவங்கள் அணுகாது