PT 7.4.3

சாரநாதன் அடியார்களே தேவர்களாவர்

1580 மீதோடிவாளெயிறுமின்னிலக
முன்விலகும்உருவினாளை *
காதோடுகொடிமூக்கன்றுடனறுத்த
கைத்தலத்தா! என்றுநின்று *
தாதோடுவண்டலம்பும்
தண்சேறையெம்பெருமான்தாளையேத்தி *
போதோடுபுனல்தூவும்புண்ணியரே
விண்ணவரில்பொலிகின்றாரே.
1580 mītu oṭi vāl̤ ĕyiṟu miṉ ilaka *
muṉ vilakum uruviṉāl̤ai *
kātoṭu kŏṭi mūkku aṉṟu uṭaṉ aṟutta *
kaittalattā ĕṉṟu niṉṟu **
tātoṭu vaṇṭu alampum * taṇ ceṟai
ĕm pĕrumāṉ tāl̤ai etti *
potoṭu puṉal tūvum puṇṇiyare *
viṇṇavaril pŏlikiṉṟāre-3

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1580. In Thiruthancherai where bees stir the pollen of the flowers and sing, devotees worship the god saying, “When Surpanakha with sharp bright teeth came like a lightning bolt before you, you cut off her nose and ears with your divine hands. ” I worship the feet of those virtuous devotees who sprinkle water and flowers on the god’s feet and shine brighter than the gods in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மீது ஓடி மேல் முகமாக வளர்ந்து; முன் விலகும் முன்னே வந்து நின்ற; மின் இலக ஒளி பொருந்திய; வாள் எயிறு கோரைப் பல்லானது; உருவினாளை பயங்கர உருவத்தையுடைய சூர்ப்பணகையின்; காதோடு காதையும்; கொடி மூக்கு கொடி மூக்கையும்; அன்று உடன் அன்று உடனே; அறுத்த அறுத்துவிட்ட; கைத்தலத்தா! கையை யுடையவனே!; என்று நின்று என்று நின்று; தாதோடு மகரந்த தூள்களுடன் இருக்கும்; வண்டு அலம்பும் வண்டுகள்; தண் சேறை குளிர்ந்த திருச்சேறையிலிருக்கும்; எம்பெருமான் எம்பெருமானின்; தாளை ஏத்தி தாளைப் பற்றி; போதோடு புஷ்பங்களையும்; புனல் தூவும் நீரையும் ஸமர்பிக்கும்; புண்ணியரே பாக்கியசாலிகள்; விண்ணவரில் தேவர்களைக் காட்டிலும்; பொலிகின்றாரரே மேம்பட்டவராகின்றனர்