PT 7.4.1

சாரநாதனைத் தொழுவாரே என் தலைவர்

1578 கண்சோரவெங்குருதிவந்திழிய
வெந்தழல்போல்கூந்தலாளை *
மண்சேரமுலையுண்டமாமதலாய்!
வானவர்தம்கோவே! என்று *
விண்சேரும்இளந்திங்கள்அகடுரிஞ்சு
மணிமாடமல்கு * செல்வத்
தண்சேறையெம்பெருமான்தாள்தொழுவார் காண்மின்
என்தலைமேலாரே. (2)
1578 ## kaṇ cora vĕm kuruti vantu izhiya *
vĕm tazhalpol kūntalāl̤ai *
maṇ cera mulai uṇṭa mā matalāy *
vāṉavar-tam kove ĕṉṟu **
viṇ cerum il̤an tiṅkal̤ akaṭu uriñcu *
maṇi māṭam malku * cĕlvat
taṇ ceṟai ĕm pĕrumāṉ tāl̤ tŏzhuvār *
kāṇmiṉ-ĕṉ talaimelāre-1

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1578. Your devotees praise you saying, “O king of the gods! When you were a baby you drank poisonous milk from the breasts of Putanā with fire-like red hair, and her blood flowed out swiftly, her eyes became tired and she fell to the ground. You are a strong child, and you are the king of the gods in the sky. ” You are the god of rich Thiruthancherai surrounded with diamond-studded palaces that touch the crescent moon in the sky. See, folding my hands on my head, I worship those devotees who worship the feet of you, our god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்சோர க்ரூரமான கண்கள் சுழலவும் பின் தளரவும்; வெம் குருதி உஷ்ணமான; வந்து இழிய ரத்தம் பெருகும்படி; வெந்தழல் போல் நெருப்பைப் போன்ற; கூந்தலாளை கூந்தலையுடைய பூதனை; மண் சேர மாண்டுபோகும்படி; முலை உண்ட பாலை உறிஞ்சியுண்ட; மா மதலாய்! இளம்பிள்ளையே!; வானவர் தேவர்கள்; தம் கோவே! என்று தலைவனே! என்று; விண் சேரும் ஆகாயத்தில் இருக்கும்; இளங்திங்கள் இளம் சந்திரனின்; அகடு உரிஞ்சு கீழ்வயிற்றைத் தொடுமளவு; மணி மாட ரத்ன மயமான மாளிகைகள்; மல்கு செல்வ நிறைந்த செல்வம் மிக்க; தண் சேறை குளிர்ந்த திருச்சேறையிலிருக்கும்; எம் பெருமான் எம் பெருமானின்; தாள் தொழுவார் பாதங்களைப் பற்றுபவர்கள்; என் தலை என் தலைமேல்; மேலாரே பாதங்களை வைத்து உலாவுவதை; காண்மின் பாருங்கள்