PT 7.2.8

நம்பீ! நீ என் மனத்தில்தான் இருக்கவேண்டும்

1565 எப்போதும்பொன்மலரிட்டு இமையோர்தொழுது * தங்கள்
கைப்போதுகொண்டுஇறைஞ்சிக் கழல்மேல்வணங்க நின்றாய் *
இப்போதுஎன்னெஞ்சினுள்ளே புகுந்தாயைப்போகலொட்டேன் *
நற்போதுவண்டுகிண்டும் நறையூர்நின்றநம்பீயோ!
1565 ĕppotum pŏṉ malar iṭṭu * imaiyor tŏzhutu * taṅkal̤
kaippotu kŏṇṭu iṟaiñcik * kazhalmel vaṇaṅka niṉṟāy **
ippotu ĕṉ nĕñciṉ ul̤l̤e * pukuntāyaip pokal ŏṭṭeṉ *
nal potu vaṇṭu kiṇṭum * naṟaiyūr niṉṟa nampīyo-8

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1565. Always the gods with eyes that do not blink place golden blossoms at your feet. They carry flowers in their hands and come to worship your ankleted feet. Now you have entered my heart and I will not allow you to leave. O Nambi, you stay in Naraiyur where the bees plunge into beautiful buds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் போது நல்ல புஷ்பங்களிலே; வண்டு கிண்டும் வண்டுகள் தேன் பருகும்; நறையூர் நறையூரில்; நின்ற நம்பீயோ! இருக்கும் நம்பியே!; இமையோர் எப்போதும் தேவர்கள் எப்போதும்; பொன் மலர் இட்டு பொன் மலர் இட்டு; தொழுது தங்கள் தொழுது தங்களுடைய; கைப்போது கொண்டு புஷ்பம் போன்ற கைகளினால்; இறைஞ்சி அஞ்சலி செய்து; கழல் மேல் உன் பாதங்களை; வணங்க நின்றாய் வணங்கும்படி நின்றவனே!; இப்போது என் இப்போது என்; நெஞ்சின் உள்ளே நெஞ்சின் உள்ளே; புகுந்தாயைப் புகுந்த உன்னை; போகலொட்டேன் போகலொட்டேன