PT 7.2.5

நம்பியே! என் வனத்தை விடுத்து அகலமுடியாது

1562 நீண்டாயைவானவர்கள் நினைந்துஏத்திக்காண்பரிதால் *
ஆண்டாயென்றுஆதரிக்கப்படுவாய்க்கு நான்அடிமை *
பூண்டேன் * என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன் *
நாண்தான்உனக்கொழிந்தேன் நறையூர்நின்றநம்பீயோ!
1562 nīṇṭāyai vāṉavarkal̤ * niṉaintu ettik kāṇpu aritāl *
āṇṭāy ĕṉṟu ātarikkap paṭuvāykku * nāṉ aṭimai
pūṇṭeṉ ** ĕṉ nĕñciṉ ul̤l̤e pukuntāyaip pokal ŏṭṭeṉ *
nāṇ-tāṉ uṉakku ŏzhinteṉ * naṟaiyūr niṉṟa nampīyo-5

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1562. O tall one, it is hard for the gods to know who you are and to praise you. I knew that you protect your devotees if they come to you for refuge. You entered the heart of me, your slave, and I will not allow you to leave it. All the days I live will be only to praise you, O Nambi, god of Naraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீண்டாயை நெடுமாலாகிய; வானவர்கள் உன்னை தேவர்கள்; நினைந்து ஏத்தி நினைந்து துதித்து; காண்பு காண்பதானது; அரிதால் அரிதான காரியம் ஆச்சர்யமும் கூட; ஆண்டாய் என்று எங்கள் ஸ்வாமியே! என்று; ஆதரிக்க தேவர்களால்; படுவாய்க்கு துதிக்கப்படும் உன்விஷயத்தில்; நான் அடிமை நான் உன்னை; பூண்டேன் துதிக்கப் பெற்றேன்; என் நெஞ்சின் உள்ளே எனது மனத்திலுள்ளே; புகுந்தாயை புகுந்திருக்கிற உன்னை இனி வேறு; போகலொட்டேன் எங்கும் போக விட மாட்டேன்; உனக்கு உன் விஷயத்திலே; நாண் தான் ஒழிந்தேன் வெட்கமற்றவனானேன்; நறையூர் நின்ற நம்பீயோ! நறையூர் நின்ற நம்பியே!