PT 7.2.10

நெடுங்காலம் தேவராக வாழ்வர்

1567 நன்னீர்வயல்புடைசூழ் நறையூர்நின்றநம்பியை *
கன்னீரமால்வரைத்தோள் கலிகன்றிமங்கையர்கோன் *
சொன்னீரசொல்மாலை சொல்லுவார்கள் * சூழ்விசும்பில்
நன்னீர்மையால்மகிழ்ந்து நெடுங்காலம்வாழ்வாரே (2)
1567 ## nal nīr vayal puṭai cūzh * naṟaiyūr niṉṟa nampiyai *
kal nīra māl varait tol̤ * kalikaṉṟi maṅkaiyar-koṉ **
cŏl nīra cŏl-mālai * cŏlluvārkal̤ cūzh vicumpil *
nal nīrmaiyāl makizhntu * nĕṭuṅ kālam vāzhvāre-10

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1567. Kaliyan, the chief of Thirumangai with arms strong as mountains composed a garland of pāsurams with beautiful words on the Nambi, the god of Naraiyur surrounded with fields filled with pure water. If devotees learn and recite these pāsurams they will go to the spiritual world and stay there happily forever.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நீர் வயல் நல்ல நீரையுடைய; புடை சூழ் வயல்கள் சூழ்ந்த; நறையூர் நறையூரில்; நின்ற நம்பியை! இருக்கும் நம்பியை!; கல் நீர மால் ஒலிக்கின்ற அருவி நீரையுடைய; வரை மலைபோன்ற; தோள் திருத்தோள்களை யுடையவரும்; மங்கையர் திருமங்கை; கோன் நாட்டுத் தலைவருமான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த; சொல் நீர புகழை இயல்பாக உடைய; சொல் மாலை பாசுரங்களை; சொல்லுவார்கள் அனுஸந்திப்பவர்கள்; சூழ் விசும்பில் பரமபதத்தில்; நல் நல்ல ஸ்வபாவத்துடன்; நீர்மையால் நித்தியகைங்கர்யம் செய்து கொண்டு; மகிழ்ந்து நெடுங் காலம் பலகாலம் மகிழ்ச்சியுடன்; வாழ்வாரே வாழ்வார்கள்