PT 7.10.9

பக்தவத்சலனைக் கண்ணாரக் கண்டேன்

1646 பண்ணினைப்பண்ணில்நின்றதோர்பான்மையைப்
பாலுள்நெய்யினைமாலுருவாய்நின்ற
விண்ணினை * விளங்குஞ்சுடர்ச்சோதியை
வேள்வியைவிளக்கினொளிதன்னை *
மண்ணினைமலையைஅலைநீரினை
மாலைமாமதியைமறையோர்தங்கள்
கண்ணினை * கண்களாரளவும்நின்று
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே.
1646 paṇṇiṉaip paṇṇil niṉṟatu or pāṉmaiyaip *
pālul̤ nĕyyiṉai māl uru āy niṉṟa
viṇṇiṉai * vil̤aṅkum cuṭarc cotiyai *
vel̤viyai vil̤akkiṉ ŏl̤i-taṉṉai **
maṇṇiṉai malaiyai alai nīriṉai *
mālai mā matiyai maṟaiyor-taṅkal̤
kaṇṇiṉai * kaṇkal̤ āral̤avum niṉṟu *
kaṇṇamaṅkaiyul̤ kaṇṭukŏṇṭeṉe-9

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-10

Simple Translation

1646. Thirumāl is music and its sweetness, the butter in milk, the sky, shining light, the brightness of a lamp and sacrifice. He, the dark one, is the earth, the mountains and the waves on the ocean, the beautiful moon that rises in the evening, and the eyes of the Vediyars. I found him in Thirukannamangai and my eyes enjoyed him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பண்ணினை இசை போன்ற இனியவனும்; பண்ணில் நின்றது இசையின் ஸாரமான தன்மைபோன்ற; ஓர் பான்மையை தன்மையை யுடையவனும்; பாலுள் பாலில் மறைந்திருக்கும்; நெய்யினை நெய் போன்றவனும்; மால் உருவாய் நின்ற விசாலமான ஸ்வரூபத்தையுடைய; விண்ணினை விளங்கும் பரமபதத்தில் விளங்கும்; சுடர்ச் சோதியை ஒளி மிகுந்த ஜோதியாய்; வேள்வியை வேள்வியின் நாயகனாய்; விளக்கின் ஒளி விளக்கின் ஒளி போல்; தன்னை ஸ்வயம் பிரகாசனாய்; மண்ணினை பூமிபோலே எல்லோருக்கும் ஆதாரமானவனாய்; மலையை மலையைப் போல் நிலையானவனும்; அலை நீரினை அலை நீர் போல் கலந்து பரிமாறுபவனும்; மா மதியை சிறந்த ஞானம் அளிப்பவனுமான; மாலை திருமாலை; மறையோர் வைதிகர்களுக்கு பெருமான் என்னும் கண் போன்று; கண்ணினை இருப்பவனுமான பெருமானை; கண்கள் ஆரளவும் நின்று கண்கள் திருப்தி பெறுமளவும் நின்று; கண்ணமங்கையுள் திருக்கண்ண மங்கையில்; கண்டுகொண்டேனே கண்டுகொண்டேனே