PT 7.1.2

நம்பி! நான் உன்னையே அழைக்கின்றேன்

1549 வற்றாமுதுநீரொடு மால்வரையேழும் *
துற்றாமுன்துற்றிய தொல்புகழோனே! *
அற்றேன்அடியேன் உன்னையேஅழைக்கின்றேன் *
பெற்றேன்அருள்தந்திடு என்எந்தைபிரானே!
1549 vaṟṟā mutunīrŏṭu * māl varai ezhum *
tuṟṟu āka muṉ tuṟṟiya * tŏl pukazhoṉe **
aṟṟeṉ aṭiyeṉ * uṉṉaiye azhaikkiṉṟeṉ *
pĕṟṟeṉ arul̤ tantiṭu * ĕṉ ĕntai pirāṉe-2

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1549. Ancient and famous Lord of Naraiyur, you swallowed all the oceans that never dry and the seven hills. I have no one—I am your slave. I call you, I come to you. Give me your grace, my father and lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வற்றா முதுநீரொடு வற்றாத கடல்களையும்; மால் வரை ஏழும் பெரிய ஏழு மலைகளையும்; முன் முன்பொருசமயம்; துற்று ஆக துற்றிய ஒரு கபளமாக வாரி விழுங்கிய; தொல் புகழோனே! கீர்த்தியையுடையவனே!; என் எந்தை பிரானே! என் தந்தையே!; அற்றேன் அடியேன் உனக்கே தாஸனான அடியேன்; உன்னையே அழைக்கின்றேன் உன்னையே அழைக்கும்; பெற்றேன் இப்பெரும் பேற்றைப் பெற்றேன்; அருள் தந்திடு அருள் தந்திடவேண்டும்