PT 6.9.7

திருத்துழாய் முடியான் திருநறையூரில் உள்ளான்

1534 சீர்தழைத்தகதிர்ச்செந்நெல் செங்கமலத்திடையிடையின் *
பார்தழைத்துக்கரும்போங்கிப் பயன்விளைக்கும்திருநறையூர் *
கார்தழைத்ததிருவுருவன் கண்ணபிரான்விண்ணவர்கோன் *
தார்தழைத்ததுழாய்முடியன் தளிரடியேஅடைநெஞ்சே!
1534 cīr tazhaitta katirc cĕnnĕl * cĕṅ kamalattu iṭai iṭaiyiṉ *
pār tazhaittuk karumpu oṅkip * payaṉ vil̤aikkum tirunaṟaiyūr **
kār tazhaitta tiru uruvaṉ * kaṇṇa-pirāṉ viṇṇavar-koṉ *
tār tazhaitta tuzhāy muṭiyaṉ * tal̤ir aṭiye aṭai nĕñce-7

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1534. O heart, let us go and worship the soft feet that are as tender as shoots of the divine dark cloud-like Kannapirān, the king of the gods in the sky with a fresh thulasi garland in his hair. He stays in Thirunaraiyur where red lotuses bloom among the paddy growing everywhere with rich clusters of seeds and sugarcane plants flourish, giving sweetness to the world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீர் தழைத்த பூர்ண அழகுடைய; கதிர் கதிர்களோடு கூடின; செந்நெல் நெற்பயிர்களின் இடையில் முளைத்த; செங்கமலத்து தாமரையின்; இடைஇடையின் இடையிலும்; பார் தழைத்துக் தழைத்து; ஓங்கி ஓங்கி வளரும்; கரும்பு கரும்பு; பயன்விளைக்கும் பயன் அளிக்கும்; திருநறையூர் திருநறையூரிலிருக்கும் பெருமானை; கார் தழைத்த மேகம் போன்ற; திரு உருவன் உருவமுடைய; கண்ணபிரான் கண்ணபிரான்; விண்ணவர்கோன் விண்ணவர்களின் தலைவனாய்; தார் தழைத்த துழாய் பூக்கள் நிறைந்த துளசி; முடியன் மாலை அணிந்தவனின்; தளிர் அடியே மென்மையான அடிகளை; அடை அடைவாய்; நெஞ்சே! நெஞ்சே!