PT 6.9.10

தேவர்களாகி வாழ்வர்

1537 திண்களகமதிள்புடைசூழ் திருநறையூர்நின்றானை *
வண்களகநிலவெறிக்கும் வயல்மங்கைநகராளன் *
பண்களகம்பயின்றசீர்ப் பாடலிவைபத்தும்வல்லார் *
விண்களகத்திமையவராய் வீற்றிருந்துவாழ்வாரே. (2)
1537 ## tiṇ kal̤aka matil̤ puṭai cūzh * tirunaṟaiyūr niṉṟāṉai *
vaṇ kal̤akam nilavu ĕṟikkum * vayal maṅkai nakarāl̤aṉ **
paṇkal̤ akam payiṉṟa cīrp * pāṭal-ivai pattum vallār *
viṇkal̤ akattu imaiyavar āy * vīṟṟiruntu vāzhvāre-10

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1537. Kaliyan, the chief of Thirumangai surrounded by flourishing fields where the moon shines bright composed ten musical pāsurams on the god of Thirunaraiyur surrounded by strong walls. If devotees learn and recite these ten pāsurams they will go to the sky and live with gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திண் களக சந்தனம் பூசிய; மதிள் புடைசூழ் மதிள்களால் சூழ்ந்த; திருநறையூர் திருநறையூர்; நின்றானை பெருமானைக் குறித்து; வண் களகம் அழகிய அன்னங்கள்; நிலவு எறிக்கும் வாழ்வதால் ஒளியுள்ள; வயல் மங்கை வயல்களையுடைய திருமங்கை; நகராளன் திருமங்கை ஆழ்வார்; பண்கள் அகம் பண்களில் சிறந்த; பயின்ற சீர் பாடல்களை அருளிச்செய்த; பாடல் இவை இந்த பத்துப்; பத்தும் வல்லார் பாசுரங்களையும் ஓதுபவர்; விண்கள் அகத்து விண்ணுலகங்களில் சிறந்த; வீற்றிருந்து இமையவராய் பரமபதத்தில் தேவர்களாக; வாழ்வாரே வாழ்வார்கள்