PT 6.5.7

சாந்தீபினிக்கு அருள்செய்தவன் அமரும் ஊர் இது

1494 முந்துநூலும்முப்புரிநூலும் முன்னீந்த *
அந்தணாளன்பிள்ளையை அஞ்ஞான்றுஅளித்தானூர் *
பொந்தில்வாழும் பிள்ளைக்காகிப் புள்ளோடி *
நந்துவாரும் பைம்புனல்வாவிநறையூரே.
1494 muntu nūlum muppuri nūlum * muṉ īnta *
antaṇāl̤aṉ pil̤l̤aiyai * aññāṉṟu al̤ittāṉ ūr ** -
pŏntil vāzhum pil̤l̤aikku * ākip pul̤ oṭi *
nantu vārum * paim puṉal vāvi-naṟaiyūre-7

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1494. As his guru, the Brahmin Sandipani gave him the sacred thread and taught him the Vedās, and when his son was drowning in the ocean, our god saved him and brought him back. He stays in beautiful Thirunaraiyur where birds search for snails and pick them up from the freshwater ponds and take them to feed their nestlings in the trees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முந்து நூலும் வேதங்களையும்; முப்புரி நூலும் பூணூலையும்; முன் முன்பே தனக்கு; ஈந்த தந்த மாணவனாக இருந்த காலத்தில்; அந்தணாளன் ஸாந்தீபிநி என்னும் ஆசிரியரின்; பிள்ளையை கடலில் மூழ்கிய மகனை; அஞ்ஞான்று குரு தக்ஷிணையாக; அளித்தான் ஊர் மீட்டுக் கொடுத்தவன் வாழும் ஊர்; பொந்தில் வாழும் மரப் பொந்துகளில் வாழும்; பிள்ளைக்கு ஆகி குட்டிகளின் உணவுக்காக; புள் ஓடி பறவைகள் வெகுதூரம் ஓடி; நந்து நத்தைகளை; வாரும் திரட்டிக்கொண்டு போக; பைம் புனல் தெளிந்த நீரையுடைய; வாவி தடாகங்கள் நிறைந்த; நறையூரே திருநறையூராகும்