PT 5.8.1

குகனைத் தோழமை கொண்டவன் அரங்கன்

1418 ஏழைஏதலன்கீழ்மகனென்னாது
இரங்கி மற்றவற்குஇன்னருள்சுரந்து *
மாழைமான்மடநோக்கியுன்தோழி
உம்பிஎம்பியென்றொழிந்திலை * உகந்து
தோழன்நீஎனக்குஇங்கொழியென்ற
சொற்கள்வந்து அடியேன்மனத்திருந்திட *
ஆழிவண்ண! நின்னடியிணையடைந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே. (2)
PT.5.8.1
1418 ## ezhai etalaṉ kīzhmakaṉ ĕṉṉātu
iraṅki * maṟṟu avaṟku iṉ arul̤ curantu *
māzhai māṉ maṭa nokki uṉ tozhi *
umpi ĕmpi ĕṉṟu ŏzhintilai ** ukantu
tozhaṉ nī ĕṉakku iṅku ŏzhi ĕṉṟa
cŏṟkal̤ vantu * aṭiyeṉ maṉattu iruntiṭa *
āzhi vaṇṇa niṉ aṭi-iṇai aṭainteṉ * -
aṇi pŏzhil tiruvaraṅkattu ammāṉe-1

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1418. You did not consider that the boatman Guhan was poor and low-caste, or that he was not your relative, but gave your sweet grace to him and even told him that your wife, the innocent doe-eyed Sita, was his sister-in-law and that your brother Lakshmana was his brother. You told him happily, “You are my friend. Stay here with me. ” I heard those words and they stay in my mind. O you with the color of the dark ocean, I have come to you and worship your feet. You are my refuge, god of Thiruvarangam surrounded by beautiful groves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏழை ஏதலன் ஏழை சத்ரு; கீழ்மகன் நீச ஜாதி; என்னாது என்று நினைக்காமல்; இரங்கி மற்று மிக்க தயையுடன்; அவற்கு அந்த குஹனுக்கு; இன் அருள் இனிய அருள்; சுரந்து சுரந்து ராமன்; மாழை மிருதுவான; மான் மட மான் போன்ற; நோக்கி பார்வையுடைய; உன் தோழி ஸீதை உன் தோழி; உம்பி உன் தம்பியான; எம்பி என்று லக்ஷ்மணன் என் தம்பி; என்று என்று சொன்னதுடன்; ஒழிந்திலை உகந்து விடாதவனாய் மகிழ்ந்து; தோழன் நீ எனக்கு நீ எனக்கு தோழன்; இங்கு ஒழி என்ற இங்கே நில் என்ற; சொற்கள் வந்து சொற்கள் வந்து; அடியேன் மனத்து என் மனதில்; இருந்திட ஆழப் பதிந்திட; ஆழி வண்ண! கடல் போன்ற நிறமுடையவனே!; நின் அடியிணை உன் பாதங்களில்; அடைந்தேன் சரணமடைந்தேன்; அணி அழகிய; பொழில் சோலைகள் சூழ்ந்த; திருவரங்கத்து திருவரங்கத்திலுள்ள; அம்மானே! பெருமானே!