PT 5.3.1

திருவெள்ளறையானே! என்னை பக்தனாக்கு

1368 வென்றிமாமழுவேந்தி முன்மண்மிசைமன்னரை மூவெழுகால்
கொன்றதேவ! * நின்குரைகழல்தொழுவது ஓர்வகை எனக்கருள்புரியே *
மன்றில்மாம்பொழில்நுழைதந்துமல்லிகைமௌவலின் போதுஅலர்த்தி *
தென்றல்மாமணம்கமழ்தரவரு திருவெள்ளறை நின்றானே! (2)
PT.5.3.1
1368 ## vĕṉṟi mā mazhu enti muṉ maṇmicai
maṉṉarai * mūvĕzhukāl
kŏṉṟa teva!-niṉ kurai kazhal tŏzhuvatu or
vakai * ĕṉakku arul̤puriye ** -
maṉṟil mām pŏzhil nuzhaitantu * mallikai
mauvaliṉ potu alartti *
tĕṉṟal mā maṇam kamazhtara varu * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-1

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1368. O divine lord who came as ParasuRāman carrying a mazhu and conquered many kings for twenty-seven generations, you stay in Thiruvellarai where fragrant breezes enter the mango groves and the mandrams and make the jasmine and mullai bloom. Give me your grace and show me a way to reach and worship your ankleted feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென்றல் தென்றல் காற்று; மாம் பொழில் மாந்தோப்புகளின்; மன்றில் இடைவெளியில்; நுழைதந்து நுழைந்தும்; மெளவலின் முல்லைப் பூக்களையும்; போது அலர்த்தி மலரச்செய்தும்; மா மணம் மிக்க மணம்; கமழ்தர வரு வீச வந்து உலாவும்; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; முன் முன்பு ஒரு சமயம்; வென்றி மா வெற்றியருளும்; மழு ஏந்தி கோடாலியை ஏந்தி; மண்மிசை பூமியிலுள்ள; மன்னரை அரசர்களை; மூவெழுகால் இருபத்தொரு தலைமுறை; கொன்ற தேவ! கொலைசெய்த தேவனே!; நின் குரை உன்னுடைய சப்திக்கும்; கழல் ஆபரணத்துடன் கூடிய பாதங்களை; தொழுவது வணங்கும்; ஓர் வகை ஓரு உபாயத்தை; எனக்கு அருள்புரியே எனக்கு அருளவேணும்