PT 5.10.8

மனமே! நந்திபுர விண்ணகரே அடைவாய்

1445 எண்ணில்நினைவெய்தியினியில்லையிறையென்று முனியாளர்திருவார் *
பண்ணில்மலிகீதமொடுபாடிஅவராடலொடு கூடஎழிலார் *
மண்ணிலிதுபோலநகரில்லையென வானவர்கள்தாம்மலர்கள்தூய் *
நண்ணியுறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
PT.5.10.8
1445 ĕṇṇil niṉaivu ĕyti iṉi illai iṟai ĕṉṟu * muṉi
yāl̤ar tiru ār *
paṇṇil mali kītamŏṭu pāṭi avar āṭalŏṭu *
kūṭa ĕzhil ār **
maṇṇil itupola nakar illai ĕṉa * vāṉavarkal̤
tām malarkal̤ tūy *
naṇṇi uṟaikiṉṟa nakar * nantipuraviṇṇakaram
-naṇṇu maṉame-8

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1445. In Nandipuravinnagaram the divine sages come and worship him, sing beautiful songs and dance saying, “No matter how much we search, we find no god better than ours. ” The gods from the sky also come there, sprinkle flowers on him and say “There is no land as beautiful as this on earth. ” O heart, think of that place where he is.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எண்ணில் எண்ணிப் பார்த்தால்; நினைவு எய்தி வணங்கத்தகுந்த பெருமான் இவனே; இனி இவனைக் காட்டிலும்; இல்லை இறை வேறொருவனில்லை; யென்று முனியாளர் என்று முனிவர்கள்; திரு ஆர் இசை நிறைந்த; பண்ணில் மலி பண்ணில்; கீதமொடு பாடல்களை; பாடி பாடி துதிக்கவும்; அவர் மேலும் அந்த; ஆடலொடு கூட முனிவர்கள் ஆடவும்; வானவர்கள் தாம் வானவர்கள்; எழிலார் மண்ணில் இப்பூலோகத்தில்; இது போல இதைப் போன்ற; நகர் நகரம்; இல்லை என வேறு இல்லை என்று; மலர்கள் தூய் மலர்கள் தூவி; நண்ணி உறைகின்ற நகர் வழிபடும் நகர்; நந்திபுரவிண்ணகரம் நந்திபுர விண்ணகரத்தை; நண்ணு மனமே! மனமே! அடைந்திடுவாயாக