PT 5.10.7

நந்திவர்மன் பணி செய்த இடம் இது

1444 தந்தைமனமுந்துதுயர்நந்தஇருள்வந்த விறல்நந்தன்மதலை *
எந்தையிவனென்றுஅமரர்கந்தமலர்கொண்டுதொழ நின்றநகர்தான் *
மந்தமுழவோசைமழையாகவெழுகார் மயில்களாடுபொழில்சூழ் *
நந்திபணிசெய்தநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
PT.5.10.7
1444 tantai maṉam untu tuyar nanta irul̤ vanta viṟal *
nantaṉ matalai *
ĕntai ivaṉ ĕṉṟu amarar kanta malar kŏṇṭu tŏzha *
niṉṟa nakar-tāṉ ** -
manta muzhavu ocai mazhai āka ĕzhu kār * mayilkal̤
āṭu pŏzhil cūzh *
nanti paṇicĕyta nakar * nantipuraviṇṇakaram-
naṇṇu maṉame-7

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1444. Our lord Kannan was carried by Vasudevan as a baby in the dark night to a cowherd village and raised by strong Nandan, the chief of the cowherds. He was praised by the gods saying, "He is our father" as they sprinkled fragrant flowers and worshiped him. He stays in Nandipuravinnagaram surrounded with groves where peacocks hear the sound of drums and dance thinking it is the roaring of clouds in the rainy season. O heart, think of that place where he is and where the king Nandi served him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தந்தை மனம் தந்தை நந்தகோபன் மனதை; உந்து வருத்தும்; துயர் நந்த துயர் நீங்க; இருள் வந்த இரவிலே வந்த; விறல் மிடுக்கனான; நந்தன் மதலை நந்தகோபன் குழந்தை கண்ணனை; எந்தை இவன் தேவர்கள் இவன்; அமரரென்று எங்களுக்கு ஸ்வாமி என்று; கந்தமலர் மணம் மிக்க மலர்; கொண்டு தொழ கொண்டு தொழும்படி; நின்ற நகர் தான் நின்ற நகர் தான்; மந்த முழவு மந்தமான வாத்யங்களின்; ஓசை ஓசையைக் கேட்டு; மழையாக எழு மேகமுழக்கமெனக் கருதி; கார் மயில்கள் கார்காலத்து மயில்கள்; ஆடு பொழில் சூழ் ஆடும் சோலைகள் சூழ்ந்த; நந்தி நந்தியென்னும் ஒரு அரசன்; பணிசெய்த பணிசெய்த நகர்; நந்திபுரவிண்ணகரம் நந்திபுர விண்ணகரத்தை; நண்ணு மனமே! மனமே! அடைந்திடுவாயாக