PT 5.10.3

மனமே! நந்திபுர விண்ணகரம் சேர்

1440 உம்பருலகேழுகடலேழுமலையேழும் ஒழியாமைமுனநாள் *
தம்பொன்வயிறாரளவுமுண்டு அவையுமிழ்ந்ததடமார்வர், தகைசேர் *
வம்புமலர்கின்றபொழில்பைம்பொன்வருதும்பிமணி கங்குல்வயல்சூழ் *
நம்பனுறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
PT.5.10.3
1440 umpar ulaku ezhu kaṭal ezhu malai ezhum * ŏzhi
yāmai muṉa nāl̤ *
tam pŏṉ vayiṟu ār al̤avum uṇṭu avai umizhnta * taṭa
mārvar takai cer **
vampu malarkiṉṟa pŏzhil paim pŏṉ varu tumpi * maṇi
kaṅkul vayal cūzh *
nampaṉ uṟaikiṉṟa nakar * nantipuraviṇṇakaram
-naṇṇu maṉame-3

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1440. The broad-chested god who filled his stomach, swallowing all the seven worlds, the world of the gods, the seven oceans and the seven mountains and kept them in his stomach and spat them out stays in Nandipuravinnagaram surrounded with flourishing fields and groves where golden-colored bees drink honey from the fresh flowers. O heart, think of that place where our friend stays and go there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உம்பர் உலகு ஏழு மேலுலகங்களேழையும்; கடல் ஏழு கடல்கள் ஏழையும்; மலை ஏழும் மலைகள் ஏழையும்; ஒழியாமை ஒன்றுவிடாமல்; முன நாள் முன்பொருசமயம்; தம் பொன் வயிறு சிறப்புடைய தன் வயிறு; ஆர் அளவும் நிறையுமளவும்; உண்டு அவை உண்டு; உமிழ்ந்த உமிழ்ந்தவனும்; தடமார்வர் விசாலமான மார்பை யுடையவனும்; தகை சேர் பெருமையுடையவனும்; நம்பன் நம்பிக்கையுள்ளவனுமானவன்; உறைகின்ற நகர் இருக்கும் நகர்; வம்பு மலர்கின்ற மலரும் பூக்கள் நிறைந்த; பொழில் சோலைகளையுடைய; பைம்பொன் பொன்னிற; வரு தும்பி மணி தும்பிகளினால் அழகுடைய; கங்குல் இருண்டபயிர்களையுடைய; வயல் சூழ் வயல்களால் சூழ்ந்த; நந்திபுரவிண்ணகரம் நந்திபுர விண்ணகரத்தை; நண்ணு மனமே! மனமே! அடைந்திடுவாயாக