Chapter 1

Thirupullambudangudi - (அறிவது அறியான்)

திருப்புள்ளம்பூதங்குடி
Thirupullambudangudi - (அறிவது அறியான்)
The Lord who granted moksha to the great Jatayu, known here as Valvil Rama, gives darshan to sages in this Divya Desam. The Thayar is Pottramaraiyal. This Divya Desam, named after the bird (pull in Tamil), is located near the Kumbakonam-Thiruvaiyaru road.
பெரியவுடையாருக்கு (ஜடாயுவுக்கு) மோட்சம் கொடுத்த நிலையில் பெருமாள் வல்விலிராமன் ஈண்டு முனிவர்களுக்குக் காட்சி தருகிறார். தாயார் பொற்றாமரையாள். பறவையைக் குறிக்கும் புள் என்ற சொல்லைத் தாங்கி நிற்கும் திவ்வியதேசம் இது. இவ்வூர் கும்பகோணம்-திருவையாறு சாலைக்கு அருகில் இருக்கிறது.
Verses: 1348 to 1357
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: செந்திருத்தி
Recital benefits: Will have no troubles in life
  • PT 5.1.1
    1348 ## அறிவது அறியான் அனைத்து உலகும்
    உடையான் * என்னை ஆள் உடையான் *
    குறிய மாணி உரு ஆய *
    கூத்தன் மன்னி அமரும் இடம் **
    நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க *
    எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட *
    பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் *
    புள்ளம்பூதங்குடி தானே 1
  • PT 5.1.2
    1349 கள்ளக் குறள் ஆய் மாவலியை
    வஞ்சித்து * உலகம் கைப்படுத்து *
    பொள்ளைக் கரத்த போதகத்தின் *
    துன்பம் தவிர்த்த புனிதன் இடம் *
    பள்ளச் செறுவில் கயல் உகளப் *
    பழனக் கழனி அதனுள் போய் *
    புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் *
    புள்ளம்பூதங்குடி தானே 2
  • PT 5.1.3
    1350 மேவா அரக்கர் தென் இலங்கை *
    வேந்தன் வீயச் சரம் துரந்து *
    மா வாய் பிளந்து மல் அடர்த்து *
    மருதம் சாய்த்த மாலது இடம் **
    கா ஆர் தெங்கின் பழம் வீழக் *
    கயல்கள் பாயக் குருகு இரியும் *
    பூ ஆர் கழனி எழில் ஆரும் *
    புள்ளம்பூதங்குடி தானே 3
  • PT 5.1.4
    1351 வெற்பால் மாரி பழுது ஆக்கி *
    விறல் வாள் அரக்கர் தலைவன் தன் *
    வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும் *
    துணித்த வல் வில் இராமன் இடம் **
    கற்பு ஆர் புரிசைசெய் குன்றம் *
    கவின் ஆர் கூடம் மாளிகைகள் *
    பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும் *
    புள்ளம்பூதங்குடி தானே 4
  • PT 5.1.5
    1352 மை ஆர் தடங் கண் கருங் கூந்தல் *
    ஆய்ச்சி மறைய வைத்த தயிர் *
    நெய் ஆர் பாலோடு அமுது செய்த *
    நேமி அங் கை மாயன் இடம் **
    செய் ஆர் ஆரல் இரை கருதிச் *
    செங் கால் நாரை சென்று அணையும் *
    பொய்யா நாவின் மறையாளர் *
    புள்ளம்பூதங்குடி தானே 5
  • PT 5.1.6
    1353 மின்னின் அன்ன நுண் மருங்குல் *
    வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா *
    மன்னு சினத்த மழ விடைகள் *
    ஏழ் அன்று அடர்த்த மாலது இடம் **
    மன்னும் முது நீர் அரவிந்த
    மலர்மேல் * வரி வண்டு இசை பாட *
    புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும் *
    புள்ளம்பூதங்குடி தானே 6
  • PT 5.1.7
    1354 குடையா விலங்கல் கொண்டு ஏந்தி *
    மாரி பழுதா நிரை காத்து *
    சடையான் ஓட அடல் வாணன் *
    தடந் தோள் துணித்த தலைவன் இடம் **
    குடியா வண்டு கள் உண்ணக் *
    கோல நீலம் மட்டு உகுக்கும *
    புடை ஆர் கழனி எழில் ஆரும் *
    புள்ளம்பூதங்குடி தானே 7
  • PT 5.1.8
    1355 கறை ஆர் நெடு வேல் மற மன்னர்
    வீய * விசயன் தேர் கடவி *
    இறையான் கையில் நிறையாத *
    முண்டம் நிறைத்த எந்தை இடம் *
    மறையால் முத்தீ அவை வளர்க்கும் *
    மன்னு புகழால் வண்மையால் *
    பொறையால் மிக்க அந்தணர் வாழ் *
    புள்ளம்பூதங்குடி தானே 8
  • PT 5.1.9
    1356 துன்னி மண்ணும் விண் நாடும் *
    தோன்றாது இருள் ஆய் மூடிய நாள் *
    அன்னம் ஆகி அரு மறைகள் *
    அருளிச்செய்த அமலன் இடம் **
    மின்னு சோதி நவமணியும் *
    வேயின் முத்தும் சாமரையும் *
    பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் *
    புள்ளம்பூதங்குடி தானே 9
  • PT 5.1.10
    1357 ## கற்றா மறித்து காளியன் தன் *
    சென்னி நடுங்க நடம்பயின்ற *
    பொன் தாமரையாள் தன் கேள்வன் *
    புள்ளம்பூதங்குடி தன்மேல் **
    கற்றார் பரவும் மங்கையர் கோன் *
    கார் ஆர் புயல்கைக் கலிகன்றி *
    சொல் தான் ஈர் ஐந்து இவை பாடச் *
    சோர நில்லா துயர் தாமே 10