PT 3.7.8

யாவரும் தொழுமாறு ஆலி புகுவரோ?

1215 முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும், பேசுகின்ற *
சிற்றில்மென்பூவையும்விட்டகன்ற செழுங்கோதை தன்னைப் *
பெற்றிலேன் முற்றிழையை, பிறப்பிலிபின்னே நடந்து *
மற்றெல்லாம் கைதொழப்போய் வயலாலி புகுவர்கொலோ?
PT.3.7.8
1215 muṟṟilum paiṅ kil̤iyum * pantum ūcalum pecukiṉṟa *
ciṟṟil mĕṉ pūvaiyum * viṭṭu akaṉṟa cĕzhuṅ kotai-taṉṉaip **
pĕṟṟileṉ muṟṟu izhaiyai * piṟappili piṉṉe naṭantu *
maṟṟu ĕllām kaitŏzhap poy * vayal āli pukuvarkŏlo?-8

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1215. Her mother says, “My daughter, soft as a flower garland ornamented with precious jewels, left her play house, green parrot, ball, swing and soft-speaking puvai bird and went away. Did I not give birth to her? She went behind him who has no beginning and is worshiped by all. Will they go to Vayalāli (Thiruvāli)?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முற்றிலும் சிறுமுறத்தையும்; பைங் கிளியும் பச்சைக் கிளியையும்; பந்தும் ஊசலும் பந்தையும் ஊஞ்சலையும்; சிற்றில் பேசுகின்ற சிறிய கூட்டிலிருந்து பேசுகிற; மென் பூவையும் மெல்லிய பறவையையும்; விட்டு அகன்ற விட்டு வெளியேறின; செழும் அழகிய; கோதைதன்னை பூமாலை போன்றவளும்; முற்று நிறைந்த; இழையை ஆபரணங்கள் அணிந்தவளுமான என் மகளை; பெற்றிலேன் நான் கண்ணால் காணப்பெற்றிலேன்; பிறப்பிலி நித்யனான எம்பெருமான்; பின்னே நடந்து பின்னே நடந்துசென்று; மற்று எல்லாம் எல்லோரும்; கை தொழப் போய் கண்டு ஸேவிக்கும் படியாக; வயல் ஆலி வயல்களையுடைய திருவாலியில்; புகுவர்கொலோ புகுந்திருப்பர்களோ
muṝilum winnow; paingil̤iyum green parrot; pandhum ball; ūsalum swing; siṝil from a small nest; pĕsuginṛa speaking; men pūvaiyum tender natured myna bird; vittu aganṛa left these and went away; sezhum kŏdhai thannai one who is like a beautiful garland; muṝizhaiyai my daughter who is fully decorated with ornaments; peṝilĕn ī did not get to see her;; maṝellām kai thozha to be worshipped by everyone other than her; piṛappili pinnĕ behind the one who is opposite to all defects; nadandhu pŏy walked; vayal āli in thiruvāli which has abundance of crops; puguvarkolŏ will they enter?