PT 3.7.10

இத்தமிழ்மாலை படித்தோர் தேவருலகு அடைவர்

1217 தாய்மனம்நின்றிரங்கத்தனியே நெடுமால்துணையா *
போயினபூங்கொடியாள் புனலாலி புகுவரென்று *
காய்சினவேல்கலியன் ஒலிசெய்தமிழ்மாலைபத்தும் *
மேவியநெஞ்சுடையார் தஞ்சமாவதுவிண்ணுலகே. (2)
PT.3.7.10
1217 ## tāy maṉam niṉṟu iraṅkat * taṉiye nĕṭumāl tuṇaiyā *
poyiṉa pūṅ kŏṭiyāl̤ * puṉal āli pukuvar ĕṉṟu **
kāy ciṉa vel kaliyaṉ * ŏlicĕy tamizh-mālai pattum *
meviya nĕñcu uṭaiyār * tañcam āvatu viṇ ulake-10

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1217. Kaliyan who carries a spear and fights angrily with his enemies composed ten Tamil pāsurams about how a beautiful vine-like girl went alone, taking Nedumal of Thiruvāli as her companion and leaving her mother to worry about her. If devotees learn and recite these pāsurams, they will reach the spiritual world and be with the gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாய் மனம் தாயானவள்; நின்று இரங்க மனமிரங்கி நிற்க; தனியே தாயினிடம் சொல்லாமல் தன் இஷ்டப்படியே; நெடு மால் திருமாலை; துணையா துணையாகக் கொண்டு; போயின போன; பூங் கொடியாள் கொடிபோன்ற என் மகளும் அவனும்; புனல் ஆலி நீர்வளம் மிக்க திருவாலியிலே; புகுவர் சென்று சேர்ந்திருப்பர்களோ; என்று என்று எண்ணியதை; காய் சின வேல் கோபமும் வேலுமுடைய; கலியன் ஒலி செய் திருமங்கையாழ்வார் அருளிச்செய்த; தமிழ் மாலை பத்தும் இத்தமிழ்ப் பாமாலை பத்தையும்; மேவிய கற்க விரும்பும்; நெஞ்சுடையார் மனமுடையவர்கள்; விண் உலகே பரமபதத்தையே; தஞ்சம் ஆவது தஞ்சமாக அடைவர்
thāy mother; ninṛu manam iranga while suffering and having her stomach burn; nedumāl one who is bewildered due to more love than she; thuṇaiyā as company; thaniyĕ pŏyina one who went without the company of anyone like her; pūm kodiyāl̤ my daughter who is like a beautiful creeper (and he, both of them); punal āli in thiruvāli which has abundance of water; puguvar enṛu -will they enter or not?-; kāy sinam great anger towards enemies; vĕl and having the spear to destroy such enemies; kaliyan āzhvār; oli sey mercifully spoke; thamizh mālai paththum the ten pāsurams, each of which is a garland; mĕviya nenju udaiyār for those who can recite with heart-s involvement; viṇ ulagu the leader of the residents of paramapadham; thanjamāvadhu is the protector (he will grant them paramapadham).