PT 3.6.9

மணவாளா! ஒரு நாளாவது என்னைத் தழுவு

1206 நிலையாளா! நின்வணங்க வேண்டாயேயாகிலும் * என்
முலையாள ஒருநாள் உன்அகலத்தால் ஆளாயே? *
சிலையாளா! மரமெய்ததிறலாளா! திருமெய்ய
மலையாளா! * நீயாள வளையாளமாட்டோமே.
PT.3.6.9
1206 nilai āl̤ā niṉ vaṇaṅka * veṇṭāye ākilum * ĕṉ
mulai āl̤a ŏrunāl̤ * uṉ akalattāl āl̤āye **
cilaiyāl̤ā maram ĕyta tiṟal āl̤ā * tirumĕyya
malaiyāl̤ā * nī āl̤a val̤ai āl̤a māṭṭome-9

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

1206. You, the omnipresent lord in Thiruvāli, carry a victorious bow and stay in the Thirumeyyam hills. You, mighty one, destroyed the Asurans when they came as marudam trees. Even though you do not give me your grace to serve you, would you not embrace me one day? Until you come and love me, I cannot keep my bangles on my hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிலையாளா! சாரங்க வில்லை அடக்கியாள்பவனே!; மரம் மராமரங்கள்; எய்த திறல் ஆளா! ஏழையும் துளைத்தவனே!; திருமெய்ய திருமெய்யம் என்னும்; மலையாளா! இடத்தில் இருப்பவனே!; நிலை ஆளா நிலையாக உன்னை; நின் வணங்க வணங்க நீ; வேண்டாயே விரும்பாமல்; ஆகிலும் இருந்தாலும்; ஒருநாள் உன் ஒருநாளாகிலும்; அகலத்தால் உனது திருமார்பினால் என்னை; ஆளாயே என் முலை ஆள அணைத்தருளுவேணும்; நீ ஆள இவ்வாறு நீ செய்தால்; வளை ஆள வளைகளைப் பற்றி நான்; மாட்டோமே கவலைப் படமாட்டேன்
silai āl̤ā ŏh you who have ṣrī kŏdhaṇdam in your hand!; maram eydhda thiṛal āl̤ā ŏh you who can shoot arrow to uproot the marāmaram!; thirumeyya malai āl̤ā ŏh you who are mercifully reclining in thirumeyyam!; nilai āl̤ā nin vaṇanga ās ī surrender unto you without any other expectation; vĕṇdāyĕ āgilum even if you don-t desire for it; en mulai āl̤a to have my bosoms serve; oru nāl̤ at least one day; un agalaththāl āl̤a you should rule me by embracing with your vast chest;; nī āl̤a after you accepted; val̤ai āl̤a māttŏmĕ we will not seek out the ability to rule over our bangles.