PT 3.6.8

மணவாளா! உனது நினைவால் தூங்கவேயில்லை!

1205 குயிலாலும்வளர்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடீ! *
துயிலாதகண்ணிணையேன் நின்நினைந்து துயர்வேனோ! *
முயலாலும்இளமதிக்கே வளையிழந்தேற்கு * இதுநடுவே
வயலாலிமணவாளா! கொள்வாயோமணிநிறமே! (2)
PT.3.6.8
1205 kuyil ālum val̤ar pŏzhil cūzh * taṇ kuṭantaik kuṭam āṭi *
tuyilāta kaṇ iṇaiyeṉ * niṉ niṉaintu tuyarveṉo? **
muyal ālum il̤a matikke * val̤ai izhanteṟku * itu naṭuve
vayal āli maṇavāl̤ā * kŏl̤vāyo maṇi niṟame?-8

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

1205. I bathe in the cool pond in Kudandai surrounded with flourishing groves where cuckoo birds sing, and I suffer thinking of you and cannot close my eyes to sleep. The young moon with a rabbit on it has made my bangles loose and now you steal the beautiful color of my body and make it pale. You are my beloved, O god of Vayalāli (Thiruvāli).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குயில் ஆலும் குயில்கள் களிக்குமிடமான; வளர் ஓங்கி வளர்ந்த; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; தண் குளிர்ந்த; குடந்தை திருக்குடந்தையிலிருக்கும்; குடம் ஆடி! குடக் கூத்தாடின பெருமானே!; துயிலாத உறங்காத; கண் இணையேன் கண்களையுடைய அடியேன்; நின் நினைந்து உன்னையே நினைந்து; துயர்வேனோ? துன்பப்படு வேனோ?; முயல் ஆலும் முயல் துள்ளிவிளையாடும்; இள மதிக்கே சந்திரனுக்கே; வளை வளைகளை; இழந்தேற்கு இழந்த என்னிடத்தினின்றும்; வயல் வயல்களுள்ள; ஆலி மணவாளா! திருவாலியில் இருப்பவனே!; இது நடுவே இத்தனை துக்கங்களினிடையே; மணி நிறமே! மேனிநிறத்தையும்; கொள்வாயோ? கொள்ளை கொள்வாயோ?
kuyil ālum cuckoos singing; val̤ar pozhil sūzh surrounded by tall gardens; thaṇ kudandhai residing in cool thirukkudandhai; kudamādi oh one who performed kudak kūththu (dance with pots)!; thuyilādha sleepless; kaṇ iṇaiyĕ ī who am having eyes; nin ninaindhu thinking only about you; thuyarvĕnŏ will ī feel sorrow?; muyalālum having jumping rabbit on his body; il̤a madhikkĕ for youthful moon; val̤ai izhandhĕṛku for me who has lost the bangles; vayalāli maṇavāl̤ā oh lord who is residing in thiruvāli which is surrounded by fertile fields!; idhu naduvĕ amidst these harming entities (your arrival); maṇi niṛamŏ kol̤vāyŏ will you hurt by stealing my beautiful complexion?