PT 3.6.5

குடந்தைப் பெருமானே! எனக்குத் துணைவனாகுக

1202 வாளாயகண்பனிப்பமென்முலைகள்பொன்அரும்ப *
நாணாளும்நின்நினைந்துநைவேற்கு * ஓ! மண்ணளந்த
தாளாளா! தண்குடந்தைநகராளா! வரையெடுத்த
தோளாளா! * என்தனக்கு ஓர் துணையாளனாகாயே!
PT.3.6.5
1202 vāl̤ āya kaṇ paṉippa * mĕṉ mulaikal̤ pŏṉ arumpa *
nāl̤ nāl̤um * niṉ niṉaintu naiveṟku * o maṇ al̤anta
tāl̤āl̤ā taṇ kuṭantai nakarāl̤ā * varai ĕṭutta
tol̤āl̤ā * ĕṉ-taṉakku or * tuṇaiyāl̤aṉ ākāye -5

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

1202. O bee, go and tell him this: “You are the king of the rich Kudandai. You measured the earth with your feet and carried Govardhanā mountain with your arms to save the cows and cowherds. I think of you all day and suffer as my sword-like eyes are filled with tear and my soft breasts grow pale with a soft golden color. ” O bee, go and tell him to be my companion.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண் அளந்த பூமியை யளந்த; தாளாளா! திருவடிகளையுடையவனே!; ஓ! தண் குடந்தை குளிர்ந்த திருக்குடந்தையை; நகராளா! ஆளுமவனே!; வரை எடுத்த மலையைத் தாங்கின; தோளாளா! தோள்களையுடையவனே!; வாள் ஆய வாள்போன்ற; கண் என் கண்கள் இடைவிடாது; பனிப்ப நீரைப்பெருக்கவும்; மென் முலைகள் மென்மையான மார்பகங்களில்; பொன் அரும்ப நிற வேறுபாடு தோன்றவும்; நாள் நாளும் நாள்தோறும்; நின் நினைந்து உன்னையே நினைத்து; நைவேற்கு மனம் தளர்கின்ற; என் தனக்கு ஓர் எனக்கு நீ ஒரு; துணையாளன் ஆகாயே சிறந்த துணைவனாக வேணும்
maṇ al̤andha measured the world; ŏ thāl̤āl̤ā ŏh one who has divine feet!; ŏ! thaṇ kudandhai nagar āl̤ā ŏh one who is mercifully reclining in invigorating thirukkudandhai!; varai eduththa lifted up gŏvardhana mountain as umbrella; ŏ! thŏl̤āl̤ā ŏh one who has divine shoulders!; vāl̤ āya kaṇ panippa to have overflowing tears in sword like eyes; mel mulaigal̤ on tender bosoms; pon arumba as paleness shows; nāl̤ nāl̤um everyday; nin ninaindhu thinking about you, the protector; naivĕṛku en thanakku for me, this servitor, who is in sorrow; ŏr thuṇaiyāl̤an āgāy you should be distinguished helper.