PT 3.6.4

வண்டே! எனது நோயை மணவாளனிடம் சொல்

1201 தானாகநினையானேல் தன்னினைந்துநைவேற்கு * ஓர்
மீனாயகொடிநெடுவேள் வலிசெய்யமெலிவேனோ?
தேன்வாயவரிவண்டே! திருவாலிநகராளும் *
ஆனாயற்குஎன்னுறுநோய் அறியச்சென்றுரையாயே.
PT.3.6.4
1201 tāṉāka niṉaiyāṉel * taṉ niṉaintu naiveṟku * or
mīṉ āya kŏṭi nĕṭu vel̤ * vali cĕyya mĕliveṉo? **
teṉ vāya vari vaṇṭe * tiruvāli nakar āl̤um *
āṉ-āyaṟku ĕṉ uṟu noy * aṟiyac cĕṉṟu uraiyāye-4

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

1201. Kāma, the king of love with a fish banner is shooting his powerful arrows at me and I suffer thinking of my lord who doesn’t think of me. O bee with lines on your body, who drink honey and live, go and tell the cowherd, the king of Thiruvāli, how I suffer from love for him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தானாக அவன் தானாகவே என்னை; நினையானேல் நினையாதிருந்தாலும்; தன் நினைந்து அவனையே நினைத்து மனம்; நைவேற்கு ஓர் தளர்ந்திருக்கும் என்னை; மீன் ஆய கொடி மீன் கொடியுடைய; நெடு வேள் வலி மன்மதன் துன்பப்படுத்த; செய்ய இப்படியும் நான்; மெலிவேனோ? இளைத்துப் போகலாமா?; தேன் வாய தேன்போல் இனிய பேச்சுடைய; வரி வண்டே! வரி வண்டே; திருவாலி நகர் திருவாலி நகரை; ஆளும் ஆட்சி புரிகின்ற; ஆன் ஆயற்கு கண்ணனாக அவதரித்தவனிடம்; என் உறு நோய் அறிய என் மனோவியாதியை; சென்று உரையாயே தெளிவாகத் தெரிவிக்க வேணும்
thān āga on his own; ninaiyānĕl even if he does not think about me; than ninaindhu thinking about him; naivĕṛku ī who am suffering; ŏr mīnāya kodi nedu vĕl̤ manmanthan (cupid) who has a unique fish flag; vali seyya to torment; melivĕnŏ will ī become weak?; thĕn vāya having sweet speech; vari vaṇdĕ ŏh beetle having stripes!; thiruvāli nagar āl̤um residing in the dhivyadhĕṣam named thiruvāli; ān āyaṛku for sarvĕṣvaran who incarnated as krishṇa; en uṛu nŏy the disease which is present in my body; senṛu you go; aṛiya uraiyāy you should tell him to be known by him.