PT 3.6.2

வண்டே! மணவாளனிடம் என் காதலைச் சொல்

1199 பிணியவிழும்நறுநீல மலர்கிழியப்பெடையோடும் *
அணிமலர்மேல்மதுநுகரும் அறுகாலசிறுவண்டே! *
மணிகெழுநீர்மருங்கலரும் வயலாலிமணவாளன் *
பணியறியேன், நீசென்று என்பயலைநோய்உரையாயே.
PT.3.6.2
1199 piṇi avizhu naṟu nīla * malar kizhiyap pĕṭaiyoṭum *
aṇi malarmel matu nukarum * aṟu kāla ciṟu vaṇṭe **
maṇi kazhunīr maruṅku alarum * vayal āli maṇavāl̤aṉ
paṇi aṟiyeṉ * nī cĕṉṟu * ĕṉ payalai noy uraiyāye-2

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

1199. O small six-legged bee, you open lovely, fragrant neelam flowers and stay in them with your mate and drink honey from them. I do not know the thoughts of my beloved lord of Thiruvāli where beautiful kazuneer flowers bloom on the banks of fields. O bee, go and tell him how I suffer from the love for him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிணி அவிழும் கட்டு அவிழ்கின்ற மணம் மிக்க; நறு நீல நீலோற்பல; மலர் கிழிய மலர்கள் கிழியும்படி; பெடையோடும் தன் பெடையோடு; அணி அழகிய அந்த; மலர் மேல் மலர்களிலிருந்து; மது நுகரும் தேனைப் பருகும்; அறு கால ஆறு கால்களையுடைய; சிறுவண்டே! சிறியவண்டே!; மணி கழுநீர் அழகிய செங்கழுநீர்ப் பூக்கள்; மருங்கு அலரும் நாற்புறமும் மலரும்; வயல் வயல்களையுடைய; ஆலி மணவாளன் திருவாலி மணவாளனின்; பணி அறியேன் செயலை நான் அறியேன் என்று; நீ சென்று என் நீ போய் என்; பயலை நோய் பசலை நோயைப்பற்றி; உரையாயே கூறுவாயாக
piṇi avizhum blossoming; naṛu neela malar fresh neela flowers [blue īndian water-lily]; kizhiya to tear; pedaiyŏdum with female counterpart; aṇi malar mĕl from dense flowers; madhu nugarum drinking honey; aṛu kāla having six feet; siṛu vaṇdĕ little beetle!; maṇi Beautiful; kazhunīr sengazhunīr [purple/red īndian water-lily]; marungu in all four sides; alarum blossoming; vayal surrounded by fertile fields; āli mercifully residing in thiruvāli; maṇavāl̤an lord-s; paṇi acts; aṛiyĕn ī don-t know; nī senṛu you go; en payalai nŏy paleness spreading in my whole body; uraiyāy ẏou should inform, without ignoring.