PT 3.6.1

வண்டே! திருவாலிப் பெருமானிடம் எனது நிலையை உரை

1198 தூவிரியமலருழக்கித் துணையோடும்பிரியாதே *
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே *
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி *
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே. (2)
PT.3.6.1
1198 ## tū viriya malar uzhakkit * tuṇaiyoṭum piriyāte *
pū viriya matu nukarum * pŏṟi variya ciṟu vaṇṭe **
tī viriya maṟai val̤arkkum * pukazh āl̤ar tiruvāli *
e vari vĕm cilaiyāṉukku * ĕṉ nilaimai uraiyāye-1

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

1198. O little bee with dots on your body, you stay with your mate without leaving her and you enter pure open blossoms and drink their honey. Go and tell him who shot his strong arrows at his enemies and conquered them how I suffer in love for the lord of Thiruvāli where famous Vediyars live making sacrificial fires and reciting the Vedās.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூ விரிய சிறகு விரியும்படி; மலர் உழக்கி மலர்களை மிதித்து; துணையோடும் தன் துணையை; பிரியாதே பிரியாமல்; பூ விரிய பூக்கள் விகஸிக்க; மது நுகரும் தேனைப் பருகும்; பொறி புள்ளிகளையும்; வரிய ரேகைகளையுமுடைய; சிறு வண்டே! சிறிய வண்டே; தீ விரிய தீக்கொழுந்துகள் மேலெழ; மறை வளர்க்கும் வேத முறைப்படி யாகம் செய்யும்; புகழ் ஆளர் வைதிகர்கள் வாழும்; திருவாலி திருவாலியிலிருக்கும்; ஏ வரி வெம் அம்புகளுடன் வில்லேந்திய; சிலையானுக்கு எம்பெருமானுக்கு; என் நிலைமை என் நிலைமையைக்; உரையாயே கூறுவாய்
thū wings; viriya to spread; malar well blossomed flowers; uzhakki stomped; thuṇaiyŏdum with your spouse; piriyādhĕ without separating; flowers; viriya as they blossom; madhu the honey in those flowers; nugarum drinking; poṛi dots; variya having stripes; siṛu vaṇdĕ ŏh little beetle!; thī viriya to have the fire rise; maṛai vaidhika boundaries; val̤arkkum pugazh āl̤ar those who are having fame due to conducting without any shortcomings, their; thiruvāli eternally residing in thiruvāli; ĕvari venjilaiyānukku for sarvĕṣvaran who is holding arrow and beautiful bow in his hands; en nilaimai my situation; uraiyāy you should inform.