PT 3.5.8

திருவாலியம்மானே! என் மனத்தில் புகுந்துவிட்டாய்

1195 சங்குதங்குதடங்கடல் கடன்மல்லையுள்கிடந்தாய்! * அருள்புரிந்து
இங்குஎன்னுள்புகுந்தாய்! இனிப்போயினால்அறையோ! *
கொங்குசெண்பகமல்லிகைமலர்புல்கி இன்னிளவண்டு போய் *
இளந்தெங்கின்தாதளையும் திருவாலியம்மானே!
PT.3.5.8
1195 caṅku taṅku taṭaṅ kaṭal * kaṭal mallaiyul̤ kiṭantāy * arul̤purintu
iṅku ĕṉṉul̤ pukuntāy * iṉip poyiṉāl aṟaiyo! **
kŏṅku cĕṇpakam mallikai malar pulki * iṉ il̤a vaṇṭu poy * il̤an
tĕṅkiṉ tātu al̤aiyum * tiruvāli ammāṉe-8

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1195. You who rest on Adisesha on the wide ocean filled with conches on the shore in Kadalmallai entered my heart and gave me your grace. If you want to leave my heart, I will not let you. You stay in Thiruvāli where sweet bees embrace fragrant shenbaga and jasmine blossoms and then go to play among the tender leaves of young palm trees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன் இள வண்டு இனிய இள வண்டுகள்; கொங்கு மணம் மிக்க; செண்பகம் செண்பகப்பூவையும்; மல்லிகை மல்லிகை மலரையும் தழுவி; மலர் புல்கி மது அருந்திய பின் அவற்றைவிட்டுப்போய்; இளந் தெங்கின் இளைய தென்னை மரங்களின்; தாது அளையும் பாளைகளிலே அளைய; திருவாலி அழகிய திருவாலிநகரின்; அம்மானே! பெருமானே!; சங்கு தங்கு சங்குகள் தங்கிய; தடங் கடல் திருப்பாற்கடலிலும்; கடல் மல்லையுள் திருக்கடல் மல்லையிலும்; கிடந்தாய் சயனித்திருந்த; இங்கு என்னுள் நீ இங்கு என்னுள்; அருள்புரிந்து புகுந்தாய் அருள்புரிந்து புகுந்தாய்; இனிப் போயினால் இனி நீயே என்னை விட்டுப்போக நினைக்க; அறையோ! முடியுமா
in il̤a vaṇdu sweet, young beetles; kongu very fragrant; seṇbaga malar sheṇbaga flower; malligai malar jasmine flower; pulgi (entered to drink honey) embraced (as they were very hot); il̤am thengin in tender coconut; pŏy went and entered; thādhu al̤aiyum stirring its buds; thiruvāli ammānĕ ŏh lord of thiruvāli!; sangu conches; thangu remaining forever; thadam vast; kadalul̤ in thiruppāṛkadal; kadal mallaiyul̤ in dhivyadhĕṣam named thirukkadalmallai; kidandhāy ŏh you who are mercifully reclining!; ingu here; ennul̤ in the heart of me, the servitor; arul̤ purindhu pugundhāy mercifully showered your grace and entered;; inip pŏyināl now, if you left me and separated; aṛaiyŏ victory.