PT 3.5.7

புண்ணியனே! உன்னை நான் விடமாட்டேன்

1194 உலவுதிரைக்கடல்பள்ளிகொண்டுவந்துஉன்னடியேன் மனம்புகுந்த * அப்
புலவ!புண்ணியனே! புகுந்தாயைப்போகலொட்டேன் *
நிலவுமலர்ப்புன்னைநாழல்நீழல் தண்தாமரை மலரின்மிசை * மலி
அலவன்கண்படுக்கும் அணியாலியம்மானே!
PT.3.5.7
1194 ulavu tiraik kaṭal pal̤l̤ikŏṇṭu vantu * uṉ aṭiyeṉ maṉam pukunta * ap
pulava puṇṇiyaṉe * pukuntāyaip pokalŏṭṭeṉ **
nilavu malarp puṉṉai nāzhal nīzhal * taṇ tāmarai malariṉmicai * mali
alavaṉ kaṇpaṭukkum * aṇi āli ammāṉe-7

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1194. You who rest on Adisesha on the ocean with rolling waves came and entered the mind of me, your slave, and I will not let you leave. You, all-knowing and virtuous, stay in beautiful Thiruvāli where many crabs sleep on cool lotus flowers in the shadow of nyazhal and punnai trees that are always in bloom.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிலவு மலர்ப் எப்போதும் மலரும்; புன்னை புன்னைமரங்களும்; நாழல் நாழல் மரங்களும்; நீழல் அவற்றின நிழலில்; தண் தாமரை குளிர்ந்த தாமரைப்; மலரின்மிசை பூவின் மேலே; மலி அலவன் பெரிய ஆண் நண்டுகள்; கண்படுக்கும் உறங்கும்; அணி ஆலி அழகிய திருவாலிநகரின்; அம்மானே! பெருமானே!; திரை உலவு அலை பொங்கும்; கடல் திருப்பாற்கடலில்; பள்ளி சயனித்திருந்து; கொண்டு உன் அங்கிருந்து ஒடிவந்து; அடியேன் உனது தாஸனான; மனம் என்னுடைய மனத்திலே; வந்து புகுந்த வந்து புகுந்த; அப்புலவ! அப்படிப்பட்ட பெருந்தகையே!; புண்ணியனே! நான் பெற்ற பாக்யம்; புகுந்தாயை என்னிடம் வந்து சேர்ந்த உன்னை; போகலொட்டேன் இனி நான் போகவிடமாட்டேன்
nilavu always blossoming; malar having abundance of flowers; punnai punnai tree; nāzhal palini tree (their); nīzhal in the shade; thaṇ cool; thāmarai malarin misai on the lotus flower; mali alavan huge male crabs; kaṇ padukkum resting; aṇi āli ammānĕ ŏh lord of beautiful thiruvāli!; thirai ulavu having rising waves; kadal in thiruppāṛkadal (kshīrābdhi); pal̤l̤i koṇdu mercifully reclined; un adiyĕn (subsequently) ī, your servitor, my; manam in heart; vandhu pugundha you who entered as if it is your benefit; ap pulava ŏh that omniscient lord!; puṇṇiyanĕ ŏh my good deed!; pugundhāyai ẏou who entered unconditionally; pŏgalottĕn will not let go.