PT 3.5.2

அடியேன் மனத்திருந்த அணியாலியம்மான்

1189 நீலத்தடவரை மாமணிநிகழக்கிடந்ததுபோல் * அரவணை
வேலைத்தலைக்கிடந்தாய்! அடியேன்மனத்துஇருந்தாய் *
சோலைத்தலைக்கணமாமயில்நடமாட மழைமுகில் போன்றெழுந்து * எங்கும்
ஆலைப்புகைகமழும் அணியாலியம்மானே!
PT.3.5.2
1189 nīlat taṭa varai mā maṇi nikazhak * kiṭantatupol aravu aṇai *
velaittalaik kiṭantāy aṭiyeṉ maṉattu iruntāy **
colaittalaik kaṇa mā mayil naṭam āṭa * mazhai mukil poṉṟu ĕzhuntu * ĕṅkum
ālaip pukai kamazhum * aṇi āli ammāṉe-2

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1189. You rest on a snake bed on the ocean like a precious blue jewel on a mountain and you are also in the mind of me, your slave. You are the dear god of Thiruvāli where lovely flocks of peacocks dance in the groves and the smoke from the sugarcane presses rises above like clouds and spreads fragrance everywhere.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆலைப் புகை கருப்பஞ்சாறு புகையானது; எங்கும் எல்லா இடத்திலும்; மழை மழைகாலத்து; முகில் போன்று மேகம் போன்று; எழுந்து கமழும் மேலெழுந்து மணம் வீசும்; சோலைத் தலை சோலையிலே; மா மயில் கண மயில்களின் கூட்டம்; நடமாட நடனமாட; அணி ஆலி அழகிய திருவாலியிலிருக்கும்; அம்மானே! பெருமானே!; நீலத் நீலநிறமுள்ள; தட வரை பெரிய மலையானது; மா மணி விலை மதிப்பற்ற ரத்னம்; நிகழ தன் மேல்; கிடந்தது போல் பிரகாசிப்பது போல்; வேலைத் தலை பாற்கடலிலே; அரவு அணை ஆதி சேஷன் மேல்; கிடந்தாய் சயனித்திருப்பவனே!; அடியேன் மனத்து இப்போது என் மனதில்; இருந்தாய் நீங்காதிருக்கிறாய் என்கிறார் ஆழ்வார்
ālaip pugai smoke from burning sugarcane juice; engum everywhere; mazhai mugil cloud in monsoon; pŏnṛu like; ezhundhu because of the rising; kamazhum fragrant; sŏlaith thalai in the garden; mā mayil gaṇam huge prides of peacock; nadamāda they dance; aṇi beautiful; āli ammānĕ ŏh lord of thiruvāli!; neelam bluish; thada varai huge mountain; mā maṇi priceless gem; thigazha to shine on it; kidandhadhu pŏl like reclining; vĕlaith thalai in thiruppāṛkadal (kshīrābdhi); aravaṇai on thiruvanandhāzhwān (with the kausthuba jewel shining); kidandhāy ŏh one who is reclining!; adiyĕn manaththu (now) in my heart, where ī am your servitor; irundhāy entered and remained, without leaving!