PT 3.5.1

சிந்தனைக்கு இனியான் திருவாலியம்மான்

1188 வந்துஉனதடியேன்மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும் * என்
சிந்தனைக்குஇனியாய்! திருவே! என்னாருயிரே! *
அந்தளிரணியாரசோகின் இளந்தளிர்கள்கலந்து * அவையெங்கும்
செந்தழல்புரையும் திருவாலியம்மானே! (2)
PT.3.5.1
1188 ## vantu uṉatu aṭiyeṉ maṉam pukuntāy * pukuntataṉpiṉ vaṇaṅkum * ĕṉ
cintaṉaikku iṉiyāy * tiruve ĕṉ ār uyire **
am tal̤ir aṇi ār * acokiṉ il̤antal̤irkal̤ kalantu * avai ĕṅkum
cĕn tazhal puraiyum * tiruvāli ammāṉe-1 **

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1188. I am your slave and you came and entered my thoughts. You are sweet to my mind and I worship you. You are my wealth and my precious life, the dear god of Thiruvāli where everywhere the tender shoots of asoka trees bloom like fire with lovely red flowers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம் தளிர் தளிர்களாலுண்டான; அணி ஆர் அழகிய; அசோகின் அசோக மரத்தின்; இளந்தளிர்கள் அவை இளந்தளிர்கள்; எங்கும் கலந்து எங்கும் வியாபித்து; செந் தழல் புரையும் சிவந்த அக்னி போலிருக்கும்; திருவாலி திருவாலியில் இருக்கும்; அம்மானே! எம்பெருமானே!; திருவே! செல்வனே! தாரகனே!; என் ஆருயிரே! என் ஆருயிரே!; வந்து உனது நீயாகவே வந்து; அடியேன் அடியேனான; மனம் புகுந்தாய் என் மனதில் புகுந்தாய்; புகுந்ததன் பின் அப்படி நீ வந்து புகுந்த பின்பு; வணங்கும் என் வணங்கும் என் மனத்துக்கு; சிந்தனைக்கு என் சிந்தனைக்கு; இனியாய் இனியனானாய்
am beautiful; thal̤ir acquired from sprouts; aṇi ār having abundant beauty; asŏgin aṣŏka tree-s; il̤am thal̤irgal̤ avai tender sprouts; engum kalandhu spreading everywhere; sem reddish; thazhal puraiyum like fire; thiruvāli ammānĕ ŏh you who are having thiruvāli as your abode!; thiruvĕ ŏh my wealth!; en ār uyirĕ ŏh my sustainer!; vandhu coming to my place; unadhu adiyĕn ī, your servant-s; manam in the heart; pugundhāy entered;; pugundhadhaṛpin after you entered; vaṇangum surrender; en sindhanaikku for my mind; iniyāy became sweet.