PT 3.4.9

இலக்குமியை மார்பில் கொண்டவனது காழி சேர்மின்

1186 பிறைதங்குசடையானைவலத்தேவைத்துப்
பிரமனைத்தன்உந்தியிலேதோற்றுவித்து *
கறைதங்குவேல்தடங்கண்திருவைமார்பில்
கலந்தவந்தாளணைகிற்பீர்! * கழுநீர்கூடித்
துறைதங்குகமலத்துத்துயின்று கைதைத்
தோடாரும்பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி *
சிறைவண்டுகளிபாடும்வயல்சூழ் காழிச்
சீராமவிண்ணகரேசேர்மினீரே.
PT.3.4.9
1186 piṟai taṅku caṭaiyāṉai valatte vaittup * piramaṉait taṉ untiyile toṟṟuvittu *
kaṟai taṅku vel taṭaṅ kaṇ tiruvai mārpil * kalantavaṉ tāl̤ aṇaikiṟpīr kazhunīr kūṭit **
tuṟai taṅku kamalattut tuyiṉṟu kaitait * toṭu ārum pŏti coṟṟuc cuṇṇam naṇṇi *
ciṟai vaṇṭu kal̤i pāṭum vayal cūzh * kāzhic cīrāmaviṇṇakare cermiṉ nīre-9 **

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1186. O devotees, go and worship the feet of Kannan who keeps on his right side Shivā wearing the crescent moon in his matted hair, and on his navel, Nānmuhan on a lotus, and on his chest, Lakshmi whose eyes are as sharp as spears. He stays in ShriRāmavinnagaram in Sheerkazhi where bees with lovely wings live on kazuneer flowers on the banks of the water, embracing their mates, sleeping on lotuses and playing on the pollen of the screw pine flowers. O devotees, go to that temple and worship the feet of Kannan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிறை தங்கு சந்திரனை; சடையானை சடையில் தரித்த சிவனை; வலத்தே வைத்து வலது பாகத்தில் வைத்து; பிரமனைத் தன் பிரமனைத் தன்; உந்தியிலே நாபியிலே; தோற்றுவித்து தோற்றுவித்து; கறை தங்கு வேல் கறைபடிந்த வேல் போன்ற; தடங் கண் விசாலமான கண்களையுடைய; திருவை மார்பில் திருமகளை மார்பில்; கலந்தவன் வைத்திருக்கும் பெருமானின்; தாள் தாள் பற்ற; அணைகிற்பீர்! விரும்பும் அன்பர்களே!; கழு நீர் செங்கழுநீர்ப்பூக்களில்; கூடி பெடையோடு கூடி; துறை தங்கு நீர்நிலங்களிலுள்ள; கமலத்து தாமரைப் பூவிலே; துயின்று துயின்று; கைதை தோடு ஆரும் தாழைமடல்களில் உள்ள; பொதி சோற்று மகரந்தத்; சுண்ணம் நண்ணி துகள்களில் புரண்டு; சிறை வண்டு சிறகுகளையுடைய வண்டுகள்; களி பாடும் களித்து இசைபாடும்; வயல் சூழ் வயல்களால் சூழ்ந்த; காழிச் காழியிலிருக்கும்; சீராமவிண்ணகரே சீராம விண்ணகரை; சேர்மின் நீரே நீங்கள் சென்று சேருங்கள்
piṛai thangu sadaiyānai rudhra who is donning moon on his matted hair; valaththĕ vaiththu placed on right side; piramanai brahmā; than undhiyilĕ in the lotus flower on his divine navel; thŏṝuviththu created; kaṛai thangu with blood and flesh remains (of enemies); vĕl like a spear; thadam wide; kaṇ having divine eyes; thiruvai periya pirAttiyAr; mārbil placed on his chest; kalandhavan one who eternally lives with her, his; thāl̤ divine feet; aṇaigiṛpīr oh you who desire to reach!; siṛai vaṇdu beetles which have wings; kazhunīr in sengazhunīr flowers (red lily flowers); kūdi remaining together (to eliminate the fatigue from that); thuṛai thangu present on the banks; kamalaththu in lotus flowers; thuyinṛu rested (and further); kaidhai ārum thŏdu in the thāzham [wild plant] flower which has big petal; podhi filled in it; sŏṛu buds-; suṇṇam in powder; naṇṇi fell and rolled; kal̤i (due to) the great joy; pādum singing; vayal sūzh surrounded by fertile fields; kāzhi in the town of kāśhi; sīrāma viṇṇagarĕ ṣrīrāma viṇṇagaram; nīr you; sĕrmin surrender