PT 3.4.8

வளம் நிறைந்த காழி சேர்க

1185 பட்டரவேரகலல்குல்பவளச்செவ்வாய்
பணைநெடுந்தோள்பிணைநெடுங்கண்பாலாம் இன்சொல் *
மட்டவிழும்குழலிக்காவானோர்காவில்
மரம்கொணர்ந்தானடியணைவீர்! * அணில்கள்தாவ
நெட்டிலையகருங்கமுகின்செங்காய்வீழ
நீள்பலவின்தாழ்சினையில்நெருங்கு * பீனத்
தெட்டபழம்சிதைந்துமதுச்சொரியும் காழிச்
சீராமவிண்ணகரேசேர்மினீரே.
PT.3.4.8
1185 paṭṭu aravu er akal alkul paval̤ac cĕv vāy * paṇai nĕṭun tol̤ piṇai nĕṭuṅ kaṇ pāl ām iṉcŏl *
maṭṭu avizhum kuzhalikkā vāṉor kāvil * maram kŏṇarntāṉ aṭi aṇaivīr aṇilkal̤ tāva **
nĕṭṭu ilaiya karuṅ kamukiṉ cĕṅ kāy vīzha * nīl̤ palaviṉ tāzh ciṉaiyil nĕruṅku pīṉat *
tĕṭṭa pazham citaintu matuc cŏriyum * kāzhic cīrāmaviṇṇakare cermiṉ nīre-8 **

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1185. Our lord brought the Parijada tree from Indra's garden when his wife Satyabama who had a beautiful waist, a red coral mouth, round bamboo like arms, long eyes, sweet milk-like words and thick hair adorned with flowers dripping with honey. He stays in ShriRāmavinnagaram in Sheerkazhi filled with groves where squirrels play and jump on the dark long-leafed Kamugu trees and make the unripe fruits fall from them onto the jackfruits and the sweet juice from the jackfruits flows out all over. O devotees, go to that temple and worship the feet of Kannan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பட்டு பட்டுச் சேலை அணிந்தவளும்; அரவு ஏர் பாம்பின் படம் போன்ற; அகல் அல்குல் இடுப்பையுடையவளும்; பவள பவழம் போன்ற; செவ்வாய் சிவந்த வாயும்; பணை மூங்கில் போன்று; நெடுந் தோள் நீண்ட தோள்களையும்; பிணை பெண் மானின் கண் போன்ற; நெடுங்கண் விசாலமான கண்களையும்; பால் ஆம் அம்ருதம் போன்ற; இன்சொல் இனிய சொற்களையும்; மட்டு கூந்தலின் மலர்களிலிருந்து; அவிழும் பெருகும் தேனையுடைய; குழலிக்கா ஸத்யபாமாவுக்காக; வானோர் தேவலோகத்து; காவின் சோலையிலிருந்து; மரம் பாரிஜாத மரத்தை; கொணர்ந்தான் கொண்டு வந்த; அடி பெருமானைப் பற்ற; அணைவீர்! விரும்பும் அன்பர்களே!; அணில்கள் தாவ அணில்கள் தாவும்; நெட்டு இலைய நீண்ட இலைகளையுடைய; கருங் கமுகின் பாக்கு மரத்தின்; செங் காய் பழக்காய்கள்; வீழ உதிர்ந்து விழ; நீள் நீர் வளத்தால் ஓங்கி வளர்ந்துள்ள; பலவின் பலாமரங்களின் காய்; தாழ் கனத்தால் தாழ்ந்த; சினையில் நெருங்கு கிளைகளில் நெருங்கியிருந்த; பீனத் தெட்ட பழம் பருத்த கனிந்த பழங்கள்; சிதைந்து மதுச் சிதைந்து தேனை; சொரியும் பொழியுமிடமான; காழிச் காழியிலிருக்கும்; சீராமவிண்ணகரே சீராம விண்ணகரை; சேர்மின் நீரே நீங்கள் சென்று சேருங்கள்
pattu wearing silk cloth; aravu like a snake-s hood; ĕr beautiful; agal wide; algul thigh region; paval̤am like coral; sevvāy reddish lips; paṇai like bamboo; nedu long; thŏl̤ shoulders; piṇai like a doe-s eye; nedum kaṇ wide eyes; pāl ām like nectar; in sol having sweet words; mattu avizhum honey flowing; kuzhalikkā for ṣrī sathya bāmāp pirātti who has mass of hair; vānŏr dhĕvathās-; kāvin from the garden; maram pārijātha tree (which is always present in heaven); koṇarndhān krishṇa who uprooted and brought, his; adi divine feet; aṇaivīr oh ones who desire to reach!; aṇilgal̤ squirrels; thāva jumping from branch to branch; nedu long; ilaiya having leaves; karum kamugin dark areca trees-; sengāy reddish, unripened fruits; vīzha as they are falling; nīl̤ due to abundance of water, well grown; palavin jack fruit trees-; thāzh lowered due to the weight of the unripened fruits; sinaiyil on branches; serungu dense; pīnam bulgy; thetta pazham ripened fruits; sidhaindhu being crushed; madhu honey; soriyum raining; kāzhi in the town of kāśhi; sīrāma viṇṇagarĕ ṣrīrāma viṇṇagaram; nīr you; sĕrmin surrender