PT 3.4.5

பரசுராமனாக அவதரித்தவனின் காழி சேர்க

1182 தெவ்வாயமறமன்னர்குருதிகொண்டு
திருக்குலத்தில்இறந்தோர்க்குத்திருத்திசெய்து *
வெவ்வாயமாகீண்டுவேழம்அட்ட
விண்ணவர்க்கோன்தாளணைவீர்! * விகிர்தமாதர்
அவ்வாயவாள்நெடுங்கண்குவளைகாட்ட
அரவிந்தம்முகம்காட்ட, அருகே ஆம்பல் *
செவ்வாயின்திரள்காட்டும்வயல்சூழ் காழிச்
சீராமவிண்ணகரேசேர்மினீரே.
PT.3.4.5
1182 tĕv āya maṟa maṉṉar kuruti kŏṇṭu * tiruk kulattil iṟantorkkut tirutticĕytu *
vĕv vāya mā kīṇṭu vezham aṭṭa * viṇṇavar-koṉ tāl̤ aṇaivīr vikirta mātar **
av āya vāl̤ nĕṭuṅ kaṇ kuval̤ai kāṭṭa * aravintam mukam kāṭṭa aruke āmpal *
cĕv vāyiṉ tiral̤ kāṭṭum vayal cūzh * kāzhic cīrāmaviṇṇakare cermiṉ nīre-5 **

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1182. The lord who was born as ParasuRāma on the earth, fought with his enemies and performed the final ceremonies for his ancestor with their blood, and who conquered the Asuran Kesi and killed the elephant Kuvalayābeedam stays in beautiful ShriRāmavinnagaram surrounded with fields where neydal flowers bloom like the eyes of women, lotuses blooms like their faces and red lilies bloom like their red mouths. O devotees, go and worship the feet of the god of the gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெவ் ஆய சத்துருக்களாகிய; மற மன்னர் வீர அரசர்களின்; குருதி கொண்டு ரத்தத்தாலே; திருக் குலத்தில் தன் வம்சத்தில்; இறந்தோர்க்கு மாண்டவர்களுக்கு; திருத்திசெய்து தர்ப்பணம் செய்த பரசுராமனும்; வெவ்வாய கொடிய வாயையுடைய; மா குதிரையாக வந்த கேசி என்னும்; கீண்டு அசுரனின் வாயைக் கிழித்தவனும்; வேழம் கம்ஸனது யானையை; அட்ட முடித்தவனுமான; விண்ணவர் கோன் தேவாதி தேவனுடைய; தாள் தாள் பற்ற; அணைவீர்! விரும்பும் அன்பர்களே!; விகிர்த வேறுபாடுகளுள்ள; மாதர் பெண்களின்; அவ் ஆய அப்படிப்பட்ட; வாள் ஒளி பொருந்திய; நெடுங் கண் நீண்ட கண்கள்; குவளை காட்ட கருநெய்தற் பூக்களைக் காட்டவும்; அரவிந்தம் தாமரை மலர்கள்; முகம் காட்ட முகத்தொளியைக் காட்டவும்; அருகே ஆம்பல் அருகிலுள்ள அல்லி மலர்கள்; செவ் வாயின் சிவந்த வாயின்; திரள் காட்டும் கூட்டங்களை காட்டும்; வயல் சூழ் நெல் வயல்களால் சூழ்ந்த; காழிச் காழியிலிருக்கும்; சீராமவிண்ணகரே சீராம விண்ணகரை; சேர்மின் நீரே நீங்கள் சென்று சேருங்கள்
thevvāya enemies; maṛam mannar valorous kings; kurudhi koṇdu by blood; thiruk kulaththil in his clan; iṛandhŏrkku for those who died; thiruththi seydhu satisfied (by performing rituals with water); vem cruel; vāya having mouth; kĕṣi who came in the form of a horse; kīṇdu tore; vĕzham elephant named kuvalayāpīdam; atta killed; viṇṇavar kŏn leader of nithyasūris, his; thāl̤ divine feet; aṇaivīr ŏh you who desire to reach!; vigirdham distinguished; mādhar ladies-; avvāya such; vāl̤ shining; nedu wide (stretching up to ears); kaṇ eyes; kuval̤ai kuval̤ai flowers [purple īndian water lily]; kātta show; aravindham lotus flowers; mugam radiance in face; kātta show; arugĕ near by; āmbal red lily flowers; sevvāyin reddish lips-; thiral̤ collections; kāttum showing; vayal sūzh surrounded by fertile fields; kāzhi in the town of kāśhi; sīrāma viṇṇagarĕ ṣrīrāma viṇṇagaram; nīr you; sĕrmin surrender