PT 3.4.2

திருமால் திருவடி அணைவீர்! காழிநகர் சேருங்கள்

1179 நான்முகன்நாள் மிகைத்தருக்கை இருக்குவாய்மை
நலமிகுசீர்உரோமசனால் நவிற்றி * நக்கன்
ஊன்முகமார்தலையோட்டூண்ஒழித்தஎந்தை
ஒளிமலர்ச்சேவடியணைவீர்! * உழுசேயோடச்
சூல்முகமார்வளையளைவாய்உகுத்தமுத்தைத்
தொல்குருகுசினையென்னச்சூழ்ந்தியங்க * எங்கும்
தேன்முகமார்கமலவயல்சேல்பாய் காழிச்
சீராமவிண்ணகரேசேர்மினீரே.
PT.3.4.2
1179 nāṉmukaṉ nāl̤ mikait tarukkai irukku vāymai * nalam miku cīr uromacaṉāl naviṟṟi nakkaṉ *
ūṉmukam ār talai oṭṭu ūṇ ŏzhitta ĕntai * ŏl̤i malarc cevaṭi aṇaivīr uzhu ce oṭac **
cūl mukam ār val̤ai al̤aivāy ukutta muttait * tŏl kuruku ciṉai ĕṉṉac cūzhntu iyaṅka ĕṅkum *
teṉ mukam ār kamala vayal cel pāy * kāzhic cīrāmaviṇṇakare cermiṉ nīre-2 **

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1179. Our father who removed the pride of Nānmuhan with the help of the famous sage Romasa and took away the curse that had made Shivā a beggar, causing Nānmuhan’s skull to fall from his hand stays in ShriRāmavinnagaram surrounded with fields where lotuses bloom dripping with honey, fish frolic in ponds and cranes that see the pearls from the conches think they are their eggs and, going near them, stay there. O devotees, go to his temple and worship his shining lotus feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நான்முகன் நாள் பிரமனுக்கு ஆயுள்; மிகை தருக்கை மிகுதியால் உண்டான கர்வத்தை; வாய்மை வேதத்தை ஓதாமல்; இருக்கு இருந்தமையால்; நலம் மிகு சீர் மிக்க அனுஷ்டானமுடைய; உரோமசனால் உரோமசரிஷியால்; நவிற்றி போக்குவித்தவனும்; நக்கன் ருத்திரன்; ஊன் ஆர் முகம் மாமிசம் ஒட்டியிருந்த; தலை ஓட்டு பிரம்ம கபாலத்தைக் கொண்டு; ஊண் பிச்சை யெடுத்தலை; ஒழித்த எந்தை தவிர்த்த எம்பெருமானின்; ஒளி மலர்ச் அழகிய ஒளிமயமான; சேவடி பாதங்களை; அணைவீர்! அடைய விரும்பும் அன்பர்களே!; உழு உழுகிற; சே ஓட எருதுகள் வயல்களிலே ஓடுவதனால்; சூல் முகம் ஆர் பிரஸவிக்குந் தருணத்திலிருந்த; வளை அளைவாய் சங்குகள் தங்கி இருக்கின்ற வங்குகளிலே; உகுத்த முத்தை ஈன்ற முத்துக்களை; தொல் குருகு பெரிய கொக்குகள்; சினை என தங்கள் முட்டை என்று; சூழ்ந்து இயங்க எங்கும் சூழ்ந்து எங்கும் ஸஞ்சரிக்கும்; தேன் முகம் ஆர் தேனொழுகும்; கமல தாமரைகளையுடையதும்; சேல் பாய் மீன்கள் துள்ளிக் குதிக்கும்; வயல் வயல்களையுமுடைய; காழி காழியிலிருக்கும்; சீராமவிண்ணகரே சீராம விண்ணகரை; சேர்மின் நீரே நீங்கள் சென்று சேருங்கள்
nānmugan brahmā-s; nāl̤ life span; miga as it is lengthy (caused by that); tharukkai pride,; irukku vĕdham; vāymai one who is reciting; nalam migu sīr having good conduct; urŏmasanāl by rŏmasa bhagavān; naviṝu eliminated; nakkan the naked rudhra-s (stuck on his hand); ūn ār fleshy; mugan thalaiyŏttu brahmā-s skull; ūṇ (begged and eaten) food; ozhiththa eliminated; endhai lord of all, his; ol̤i malar like a fresh flower; sĕvadi reddish divine feet; aṇaivīr ŏh you who desire to attain!; uzhu ploughing; oxen; ŏda running (due to strength); sūl mugam ār pregnant; val̤ai conches; al̤aivāy in the holes; uguththa gave birth; muththai pearls; thol kurugu huge kurugu (heron) birds; sinai enna considering those to be their eggs; sūzhndhu iyanga flying around there (by that wind); engum wherever seen; thĕn flood of honey; mugam ār flowing from face; kamalam having lotus flowers; sĕl sĕl fish; pāy jumping; vayal having fertile fields; kāzhi in the town of kāśhi; sīrāma viṇṇagarĕ ṣrīrāma viṇṇagaram; nīr you; sĕrmin surrender