PT 3.4.10

இவற்றைப் படிப்போர் உலகத் தலைவர் ஆவர்

1187 செங்கமலத்துஅயனனையமறையோர் காழிச்
சீராம விண்ணகர்என்செங்கண்மாலை *
அங்கமலத்தடவயல்சூழ்ஆலிநாடன்
அருள்மாரிஅரட்டமுக்கிஅடையார்சீயம் *
கொங்குமலர்க்குழலியர்வேள்மங்கைவேந்தன்
கொற்றவேற்பரகாலன்கலியன்சொன்ன *
சங்கமுகத்தமிழ்மாலைபத்தும்வல்லார்
தடங்கடல்சூழுலகுக்குத்தலைவர்தாமே. (2)
PT.3.4.10
1187 ## cĕṅ kamalattu ayaṉ aṉaiya maṟaiyor kāzhic * cīrāmaviṇṇakar ĕṉ cĕṅ kaṇ mālai *
am kamalat taṭa vayal cūzh āli nāṭaṉ * arul̤ māri araṭṭu amukki aṭaiyār cīyam **
kŏṅku malark kuzhaliyar vel̤ maṅkai ventaṉ * kŏṟṟa vel parakālaṉ kaliyaṉ cŏṉṉa *
caṅka mukat tamizh-mālai pattum vallār * taṭaṅ kaṭal cūzh ulakukkut talaivar tāme-10 **

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1187. Kaliyan the chief of Thirumangai of Thiruvāli, who conquered and gained victory and is the beloved husband of his queens with hair adorned with beautiful flowers that drip honey, composed a garland of ten Tamil pāsurams on Thirumāl, the lord of ShriRāmavinnagaram in Sheerkazhi surrounded with fields blooming with lotuses where Vediyars live, as learned as Nānmuhan himself who stays on a lotus.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செங் கமலத்து நாபிக் கமலத்தில் பிறந்த; அயன் அனைய பிரமனை யொத்த; மறையோர் வைதிகர்கள் வாழ்கிற; காழி காழி; சீராமவிண்ணகர் சீராமவிண்ணகரத்திலிருக்கும்; என் செங் செந்தாமரைப்போன்ற; கண் கண்களையுடைய; மாலை பெருமானைக் குறித்து; அம் கமலத் அழகிய தாமரைத்; தட வயல் தடாகங்களின் வயல்களால்; சூழ் ஆலி சூழ்ந்த திருவாலி; நாடன் நாட்டுக்குத் தலைவரும்; அருள் அருளைப் பொழியும்; மாரி மேகம் போன்றவரும்; அரட்டு தீங்கு செய்யுமவர்களை; அமுக்கி அமுங்கச் செய்பவரும்; அடையார் சத்ருக்களுக்கு; சீயம் ஸிம்ஹம் போன்றவரும்; கொங்கு மலர்க் தேன்மிக்க மலரணிந்த; குழலியர் கூந்தலையுடையவர்களுக்கு; வேள் விரும்பத்தக்கவரும்; மங்கை வேந்தன் திருமங்கைக்கு அரசனும்; பரகாலன் எதிரிகட்கு யமன் போன்றவரும்; கொற்றவேல் வெற்றி தரும் வேலையுடையவருமான; கலியன் திருமங்கை ஆழ்வார்; சொன்ன அருளிச்செய்த; சங்க முகத் புலவர்கள் அனுபவிக்கத் தகுந்த; தமிழ்மாலை தமிழ் இலக்கணத்தோடு கூடின; பத்தும் வல்லார் இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லார்; தடங்கடல் சூழ் பரந்த கடலால் சூழப்பட்ட; உலகுக்கு உலகத்திலுள்ளோர் அனைவருக்கும்; தலைவர் தாமே தாங்களே தலைவர் ஆவர்
sengamalam born from the beautiful lotus on the divine navel; ayan anaiya matching brahmā; maṛaiyŏr where brāhmaṇas are living; kāzhich chīrāma viṇṇagar eternally residing in kāśhich chīrāma viṇṇagar; en my; sengaṇ mālai on puṇdarīkākshan (lotus eyed emperumān); am beautiful; kamalam filled with lotus flowers; thadam ponds; vayal fertile fields; sūzh surrounded by; āli nādan being the leader of thiruvāli region; arul̤ māri being the one who rains mercy on the favourable ones, like a dark cloud; arattu amukki being the one who suppresses the enemies (to not let them rise); adaiyār for enemies; sīyam being like a lion; kongu filled with honey; malar flowers; kuzhaliyar for ladies who are having in their hair; vĕl̤ being the one like cupid; mangai for thirumangai region; vĕndhan being the king; parakālan being like yama for enemies; koṝam able to grant victory; vĕl holding on to the spear; kaliyan āzhvār; sonna mercifully spoke; sangam poets; mugam to meet and enjoy; thamizh mālai paththum ten pāsurams which are like garlands; vallār those who can learn with meanings; thadam vast; kadal sūzh surrounded by ocean; ulagukku in the world; thalaivar will remain the leader who is surrenderedto, by all