PT 3.10.7

காமனைப் பயந்த காளையின் கோயில் இதுதான்

1244 தீமனத்தான்கஞ்சனதுவஞ்சனையில்திரியும்
தேனுகனும்பூதனைதனாருயிரும்செகுத்தான் *
காமனைத்தான்பயந்தகருமேனியுடையம்மான்
கருதுமிடம், பொருதுபுனல்துறைதுறைமுத்து உந்தி *
நாமனத்தால்மந்திரங்கள்நால்வேதம் ஐந்து
வேள்வியோடுஆறங்கம்நவின்றுகலைபயின்று * அங்கு
ஆமனத்துமறையவர்கள்பயிலுமணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
PT.3.10.7
1244 தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் *
தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான் *
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் *
கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி **
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் * ஐந்து
வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று * அங்கு
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் *
அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 7
1244 tī maṉattāṉ kañcaṉatu vañcaṉaiyil tiriyum *
teṉukaṉum pūtaṉai-taṉ ār uyirum cĕkuttāṉ *
kāmaṉaittāṉ payanta karu meṉi uṭai ammāṉ *
karutum iṭam-pŏrutu puṉal tuṟai tuṟai muttu unti **
nā maṉattāl mantiraṅkal̤ nāl vetam * aintu
vel̤viyoṭu āṟu aṅkam naviṉṟu kalai payiṉṟu * aṅku
ām maṉattu maṟaiyavarkal̤ payilum aṇi nāṅkūr *
arimeyaviṇṇakaram-vaṇaṅku maṭa nĕñce -7

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1244. The dark-colored lord, the father of Kāma who killed Thenuhan and Putanā, who were sent by evil-minded Kamsan and wandered everywhere to deceive him stays in beautiful Arimeyavinnagaram temple in Nāngur where the crashing ocean brings pearls and leaves them on the shore and good-hearted Vediyars live, skilled in mantras, the four Vedās, the six Upanishads, the five sacrifices and many excellent arts. O heart, let us go and worship him there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தீ மனத்தான் பொல்லாத மனமுடைய; கஞ்சனது கம்சன் ஏவலால்; வஞ்சனையில் திரியும் வஞ்சனையில் திரியும்; தேனுகனும் தேனுகனுடையவும்; பூதனை தன் பூதனையினுடையவும்; ஆர் உயிரும் செகுத்தான் உயிரை முடித்தவனாகவும்; காமனைத்தான் மன் மதனை; பயந்த மகனாகப் படைத்தவனும்; கரு மேனியுடை கரிய திருமேனியுடைய; அம்மான் எம்பெருமான்; கருதும் இடம் விரும்பி இருக்குமிடம்; பொருது புனல் அலைகளையுடைய; துறை துறை துறை தோறும்; முத்து உந்தி முத்துக்களைத் தள்ளி வரும்; நா மனத்தால் நாவாலும் மனத்தாலும்; மந்திரங்கள் மந்திரங்களையும்; நால் வேதம் நான்கு வேதங்களையும்; ஐந்து வேள்வியோடு ஐந்து வேள்வியோடு; ஆறு அங்கம் ஆறு அங்கங்களையும்; நவின்று கலை கற்று மற்றுமுள்ள; பயின்று அங்கு கலைகளையும் பயின்று ஓதி; ஆம் மனத்து பரிசுத்தமான மனமுடைய; மறையவர்கள் வைதிகர்கள்; பயிலும் அணி உள்ள அழகிய; நாங்கூர் திருநாங்கூரின்; அரிமேயவிண்ணகரம் அரிமேயவிண்ணகர; வணங்கு எம்பெருமானை வணங்கு; மட நெஞ்சே! மட நெஞ்சே!
thī manaththān having cruel heart; kanjanadhu by kamsan-s instigation; vanjanaiyil having a deceitful form; thiriyum roaming; thĕnuganum dhĕnukāsaran-s; pūdhanai than pūthanā-s; ār uyir good life; seguththān one who finished; kāmanai manmantha (cupid), the most handsome one in the world; payandha gave birth; karu mĕni udai ammān the lord who is having divine form with dark complexion; karudhum idam being the desirously residing abode; porudhu punal water where waves are hitting each other; thuṛai thuṛai in every ghat; muththu undhi pushing pearls; with tongue; manaththāl and with mind; mandhirangal̤ bhagavān-s manthrams; nāl vĕdham four vĕdhams; aindhu vĕl̤viyodu five great yagyas (fire sacrifices); āṛu angam six ancillary subjects; navinṛu learnt; kalai payinṛu learnt the other ṣāsthrams; angu ām manaththu having pure heart which is apt for bhagavath vishayam; maṛaiyavargal̤ vaidhikas; payilum due to living densely; aṇi having beauty; nāngūr in thirunāngūr; arimĕya viṇṇagaram emperumān in arimĕya viṇṇagaram; mada nenjĕ ŏh obedient heart!; vaṇangu surrender.