PT 2.7.6

பிரானே! என் மகள் திறத்தே என்ன செய்யப்போகிறாய்?

1113 தன்குடிக்குஏதும் தக்கவாநினையாள்
தடங்கடல்நுடங்கெயிலிலங்கை *
வன்குடிமடங்கவாளமர்தொலைத்த
வார்த்தைகேட்டு இன்புறும்மயங்கும் *
மின்கொடிமருங்குல் சுருங்கமேல்நெருங்கி
மென்முலைபொன்பயந்திருந்த *
என்கொடியிவளுக்கு என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே!
PT.2.7.6
1113 taṉ kuṭikku etum takkavā niṉaiyāl̤ * taṭaṅ kaṭal nuṭaṅku ĕyil ilaṅkai *
vaṉ kuṭi maṭaṅka vāl̤ amar tŏlaitta * vārttai keṭṭu iṉpuṟum mayaṅkum **
miṉ kŏṭi maruṅkul curuṅka mel nĕruṅki * mĕṉ mulai pŏṉ payantirunta *
ĕṉ kŏṭi ival̤ukku ĕṉ niṉaintu iruntāy? * iṭavĕntai ĕntai pirāṉe-6

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1113. Her mother says, “My daughter doesn’t think of any of the things that she should do for her own family. When she heard the words that the god she loves destroyed the strong clan of the Rakshasās in Lankā surrounded with strong forts and the wide ocean, she was happy. She is fascinated with you. Her soft breasts are pale as gold and her waist is like a thin vine. Can’t you think of doing something to help her, O father, lord of Thiruvidaventhai?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தன் குடிக்கு தனது குலமரியாதைக்குத்; தக்கவா தகுந்த மார்க்கம்; ஏதும் நினையாள் ஒன்றும் யோசிக்கவில்லை; தடங் கடல் பெரிய கடலோடும்; நுடங்கு எயில் வளைந்த மதிளோடும் கூடின; இலங்கை இலங்கை; வன் குடி மடங்க வலிய அரக்கர் குலம் அழிய; வாள் அமர் கொடிய போர்க்களத்திலே; தொலைத்த ஒழித்த; வார்த்தை கேட்டு செய்தியைக் கேட்டு; இன்புறும் மயங்கும் ஆனந்திக்கும் மயங்கும்; மின் கொடி மின்னலும் வஞ்சிக்கொடியும்; மருங்குல் போன்ற இடை; சுருங்க மேல் நெருங்கி சுருங்கி மேலே நெருக்கமாக; மென் முலை மெல்லிய மார்பகங்களையுடைய; பொன் பயந்திருந்த பொன்மயமான பசலை பூத்திருக்கும்; என் கொடி இவளுக்கு என் பெண்ணான இவள் திறத்திலே; இடவெந்தை திருவிடவெந்தையிலிருக்கும்; எந்தை பிரானே! எம்பெருமானே!; என் நினைந்து இருந்தாய்? என்ன செய்வதாக நினைக்கிறீர்?
than her; kudikku for the clan; thakkavā apt path; ĕdhum any; ninaiyāl̤ does not analyse and know!; thadam vast; kadal ocean; nudangu curved; eyil having fort; ilangai present in lankā; van strong demons-; kudi clan; vāl̤ amar in the cruel battle; tholaiththa destroyed; vārththai news; kĕttu hear; inbuṛum become joyful; (again); mayangum will faint;; min lightning; kodi like a slender creeper; marungul waist; surunga to bend; mĕl above; nerungi close to each other; pon payandhirundha one who has golden coloured paleness; mel soft; mulai having bosoms; en kodi ival̤ukku in my daughter-s matter; en ninaindhirundhāy what are you thinking?; idavendhai having arrived in thiruvidavendhai; endhai pirānĕ ŏh lord of my clan!; sollu ẏou should mercifully speak a word.