PT 2.6.8

தலசயனரின் அன்பர்களையே தொழ வேண்டும்

1105 செழுநீர்மலர்க்கமலம் திரையுந்தவன்பகட்டால் *
உழுநீர்வயலுழவருழப் பின்முன்பிழைத்தெழுந்த *
கழுநீர்கடிகமழும் கடல்மல்லைத்தலசயனம் *
தொழுநீர்மனத்தவரைத் தொழுவாய்என்தூய் நெஞ்சே!
PT.2.6.8
1105 cĕzhu nīr malark kamalam * tirai untu vaṉ pakaṭṭāl
uzhum nīr vayal uzhavar uzhap * piṉ muṉ pizhaittu ĕzhunta
kazhu nīr kaṭi kamazhum * kaṭalmallait talacayaṉam
tŏzhum nīr maṉattavarait * tŏzhuvāy ĕṉ tūy nĕñce-8

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1105. O my pure heart! Worship the devotees who worship the god in their hearts of Kadalmallai Thalasayanam where beautiful lotuses in the flourishing water crushed by the farmers plowing with bulls and Red Indian water-lily blossoms that escaped the plows both spread their fragrance on the shore.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உழும் நீர் வயல் உழுவதையே ஸ்வபாவமாக உடைய; உழவர் உழவர்கள்; செழு நீர் திரை அழகிய நீரின் அலைகளையும்; கமலம் மலர் உந்து தாமரை மலர்களையும் தள்ளுகிற; வன் பகட்டால் வலிய எருதுகளைக்கொண்டு; உழ பின் முன் வயலை உழ பின்னும் முன்னும்; பிழைத்து எழுந்த உழவுக்குத் தப்பி யெழுந்த; கழு நீர் செங்கழுநீரும் தாமரை மலர்களின்; கடி கமழும் நறுமணம் கமழும்; ஊர் பெருமானுடைய ஊரான; கடல் மல்லை கடல் மல்லை; தொழும் நீர் தொழும் நீர்மையுடைய; மனத்தவரை மனமுள்ளவர்களை; தொழுவாய் தொழுவாய்; என் தூய் நெஞ்சே! என் தூய நெஞ்சே!
uzhunīr those who are naturally engaged in ploughing; uzhavar farmers; sezhu beautiful; nīr thirai waves of water; malar blossomed; kamalam lotus flowers; undhu pushing; van strong; pagattāl engaging the bulls; vayal uzha as they farm the land; pin mun back and forth; pizhaiththu ezhundhu which escaped and had risen; kazhunīr sengazhunīr (water-lily) and lotus flowers; kadi kamazhum the fragrance blowing; kadal mallaith thala sayanam sthalasayanam in thirukkadalmallai; thozhu worshipping; nīr having the quality; manaththavarai those who are having the heart; en thūy nenjĕ ŏh my pure heart!; thozhuvāy try to worship