PT 2.6.7

மனமே! தலசயனம் தொழுவாரையே தொழு

1104 பஞ்சிச் சிறுகூழையுருவாகி * மருவாத
வஞ்சப்பெண்நஞ்சுண்டஅண்ணல், முன்நண்ணாத *
கஞ்சைக்கடந்தவனூர் கடல்மல்லைத்தலசயனம் *
நெஞ்சில்தொழுவாரைத் தொழுவாய்என்தூய் நெஞ்சே!
PT.2.6.7
1104 pañcic ciṟu kūzhai * uru āki maruvāta
vañcap pĕṇ nañcu uṇṭa * aṇṇal muṉ naṇṇāta
kañcaik kaṭantavaṉ ūr * kaṭalmallait talacayaṉam
nĕñcil tŏzhuvārait * tŏzhuvāy ĕṉ tūy nĕñce-7

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1104. O my pure heart! Worship the devotees who keep in their hearts the lord of Kadalmallai Thalasayanam who was born on the earth as a small baby and who drank the poisonous milk of scheming Putanā when she came as a mother, and fought and conquered his enemy Kamsan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பஞ்சிச் சிறு பஞ்சுபோலே மிருதுவாய் சிறிதான; கூழை உரு ஆகி தலைமுடியுடைய யசோதை போன்ற; மருவாத பொருந்தாத உருவுடன் வந்த; வஞ்சப் பெண் வஞ்சனையுடைய பூதனையின்; நஞ்சு உண்ட விஷப் பாலை உண்ட; அண்ணல் முன் எம்பெருமான் முன் ஒரு காலத்தில்; நண்ணாத தன்னை மதிக்காத; கஞ்சைக் கம்ஸனை வென்று; கடந்தவன் முடித்த; ஊர் பெருமானுடைய ஊரான; கடல் மல்லை கடல் மல்லை; தலசயனம் தலசயனத்தை; நெஞ்சில் மனதாரத் தொழும்; தொழுவாரை அடியார்களை; தொழுவாய் தொழுவாய்; என் தூய் நெஞ்சே! என் தூய நெஞ்சே!
panji soft like cotton; siṛu small; kūzhai having hair; uruvāgi having a form; maruvādha not aligning; vanjam having mischief; peṇ pūthanā-s; nanju poison in her bosom; uṇda mercifully consumed; aṇṇal being the lord of all; mun previously; naṇṇādha one who did not approach and surrender; kanjai kamsa-s thoughts; kadandhavan krishṇa who crossed, his; kadal mallaith thala sayanam merciful reclining in sthalasayanam in thirukkadalmallai; nenjil with their heart; thozhuvārai those who worship; en obedient towards me; thūy very pure; nenjĕ ŏh heart!; thozhuvāy try to worship