PT 2.6.10

இவற்றைப் படிப்போர் அரசர்க்கரசராவர்

1107 கடிகமழுநெடுமறுகில் கடல்மல்லைத்தலசயனத்து *
அடிகளடியேநினையும் அடியவர்கள்தம்அடியான் *
வடிகொள்நெடுவேல்வலவன் கலிகன்றியொலிவல்லார் *
முடிகொள்நெடுமன்னவர்தம் முதல்வர்முதலாவாரே. (2)
PT.2.6.10
1107 ## kaṭi kamazhum nĕṭu maṟukiṉ * kaṭalmallait talacayaṉattu
aṭikal̤ aṭiye niṉaiyum * aṭiyavarkal̤-tam aṭiyāṉ
vaṭi kŏl̤ nĕṭu vel valavaṉ * kalikaṉṟi ŏli vallār
muṭi kŏl̤ nĕṭu maṉṉavar-tam * mutalvar mutal āvāre-10

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1107. Kaliyan, the warrior with a long spear, the devotee of the devotees who always think of him, composed ten pāsurams on the devotees of the god of Kadalmallai Thalasayanam that has long streets where flowers spread their fragrance. If devotees worship his devotees and learn and recite the pāsurams of Thirumangai they will become kings of kings.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடி கமழும் மணம் கமழும்; நெடு மறுகின் நீண்ட வீதிகளையுடைய; கடல் மல்லை கடல் மல்லை; அடிகள் எம்பெருமானின்; அடியே நினையும் அடிகளையே வணங்கும்; அடியவர்கள் தம் அடியான் அடியவர்களுக்கு தாஸனும்; வடி கொள் நெடு கூர்மையான பெரிய; வேல் வலவன் வேலையுடைய வல்லவன்; கலி கன்றி திருமங்கையாழ்வார் அருளிச்செய்த; ஒலி வல்லார் பாசுரங்களை ஓதவல்லவர்கள்; முடி கொள் கிரீடமணிந்த; நெடு மன்னவர் தம் ராஜாதி ராஜர்களுக்கும்; முதல்வர் முதல்வராவர்; முதலாவாரே தலைவராவர்
kadi good fragrance; kamzhum blowing; nedu wide; maṛugil having streets; kadal mallai in thirukkadalmallai; thala sayanaththu mercifully reclining in sthalasayanam; adigal̤ lord-s; adi divine feet; ninaiyum adiyavargal̤ tham the servitors who think about, their; adiyān being a servitor; vadi kol̤ having sharpness; nedu big; vĕl valavan one who can fight using the spear; kali kanṛi thirumangai āzhvār; oli this decad which is mercifully spoken by; vallār those who can learn; mudi kol̤ crowned; nedu mannavar tham mudhalvar for the emperors; mudhalāvār will become the leader